புறம் பேசியதை எல்லாம் போட்டுகொடுத்த பிக்பாஸ்.. கதிகலங்கும் ஹவுஸ்மேட்ஸ்!

பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்7 ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். விதிப்படி பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்க வேண்டும். பிக்பாஸ் கடந்த ஆறு சீசன்களுமே மிக விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்ததால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே இந்நிகழ்ச்சி உருவாக்கிக்கொண்டது.

இதையடுத்து பிக்பாஸ் 7 எப்போது வரும் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. அதைவிட யார் போட்டியாளர்களாக இருப்பார்கள் என பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இதையடுத்து அக்டோபர் 1ம் தேதி பிக்பாஸ் சீசன் 7 தொடங்கியது. இந்த சீசனில் புது விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அதாவது பிக்பாஸ் வீடு ஸ்மால் பாஸ் வீடு என இரு வீடுகளாகப் பிரித்தனர். பிக்பாஸ் வீட்டில் சரியாக விளையாடாத ஆறு போட்டியாளர்களை கேப்டனால் தேர்ந்தெடுத்து ஸ்மால்பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

ஸ்மால்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் வீட்டின் அனைத்து வேலைகளையுமே செய்யவேண்டும். மேலும் எந்த போட்டிகளிலுமே விளையாடக் கூடாது. பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் ஸ்மால்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என்பது விதிமுறை. இந்த வார கேப்டனாக மாயா தேர்வாகியுள்ள நிலையில் அவரை பெரிதும் கவராத நபர்கள் என அர்சனா, தினேஷ், விசித்திரா, கூல் சுரேஷ், மணி, ரவீனா என 6 பேர் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.

வைல்டு கார்ட் எண்ட்ரி மூலம் 5 பேர் வீட்டிற்குள் வந்தனர். ஏற்கனவே அனைத்தையும் வெளியில் இருந்து பார்த்து வந்த 5 பேரும் விளையாட்டை அசால்டாக விளையாடி வருகின்றனர்.  இந்த நிலையில், சனிக்கிழமை எபிசோட்டில் அனைவராலும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் அப்படியெ வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை எபிசோட்டில் அன்னபாரதியும் வெளியேற்றப்பட்டார். வந்த முதல் வாரத்திலேயே அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். பலரும் சமூக வலைதளங்களில் பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்றைய புரோமோக்களில், ஹவுஸ்மேட்ஸ் பேசிய வார்த்தைகளை ஸ்டேட்மண்டாக ஒளிபரப்பப்படுகிறது. இதனை படித்து இதை கூறிய நபர் ஏன் இதை செய்தார்கள் என கூற வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இதனால் ஹவுஸ்மேட்ஸ் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் பேசிய கொச்சையான வார்த்தைகளுக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் சமாளித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com