பிக்பாஸ் புரோமோ
பிக்பாஸ் புரோமோ

மீண்டும் ஒரு மிட் வீக் எவிக்‌ஷன்.. ஷாக்கில் பிக்பாஸ் ரசிகர்கள்.. வெளியேறுவது இவரா?

பிக்பாஸ் 7வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், கடைசி வாரமான இந்த வாரத்தில் மீண்டும் ஒரு மிட் வீக் எலிமினேஷன் நடைபெறுகிறது.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். விதிப்படி பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்க வேண்டும். பிக்பாஸ் கடந்த ஆறு சீசன்களுமே மிக விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்ததால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே இந்நிகழ்ச்சி உருவாக்கிக்கொண்டது.

அந்த வகையில் பிக்பாஸின் 7வது சீசன், கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புது புது விஷயங்கள் இந்த சீசனில் கொண்டு வரப்பட்டது. பிக்பாஸ், ஸ்மால் பாஸ் கான்செப்ட், ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்களின் வைல்டு கார்டு என அடுத்தடுத்து ட்விஸ்ட்களை அடுக்கியது.

அப்படி 100 நாட்களை தாண்டிய இந்த சீசனில் இந்த வார இறுதியில் ஃபைனல்ஸ் நடைபெறவுள்ளது. யார் வெற்றி பெறுவார் என போட்டி விறுவிறுப்பாக ஓடிகொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மீண்டும் ஒரு புது ட்விஸ்டாக ஃபைனல் வாரத்தில் வெளியேறிய போட்டியாளர்கள் சர்ப்ரைஸாக மீண்டும் உள்ளே வருகிறார்கள். வந்த அவர்களும் வெளியே நடப்பதை கூறி போட்டியாளர்களை உஷார்படுத்துகின்றனர்.

இதன் விளைவாக இந்த வார போட்டியில் பல மாற்றம் நிகழ்கிறது. இறுதி வாரத்தில் யார் வெற்றி பெறப்போகிறார் என ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மிட் வீக் எவிக்‌ஷனில் விஜய் வர்மா நேற்று வெளியேறினார். இதனை தொடர்ந்து டாப் 5 போட்டியாளர்களாக விஷ்ணு, தினேஷ், மணி, மாயா, அர்ச்சனா ஆகியோர் உள்ளனர்.

இதில் இன்று விஷ்ணு மிட் வீக் எவிஷனில் வெளியேறபோவதாக கூறப்படுகிறது. இன்னும் 2 நாட்களே ஃபைனல்ஸுக்கு உள்ள நிலையில், டிக்கெட் டூ ஃபைனல்ஸை வென்ற நபரே வெளியேறுவது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com