சாக துணிந்தேன்.. ஐஷு போட்ட பதிவால் ஷாக் ஆன ரசிகர்கள்!

ஐஷு
ஐஷு

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த ஐஷு உயிரை விட முடிவெடுத்ததாக வெளியிட்ட அறிக்கை பரபரப்பை கிளப்பியுள்ளது.

விஜய் டிவியில் பிரபலமாக ஓடி கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் பிக்பாஸும் ஒன்று. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். தற்போது பிக்பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கும் நிலையில், பூகம்பமாக வெடித்தது பிரதீப் வெளியேற்றம். பெண்கள் பாதுகாப்பு என்ற பெயரில் பிரதீப் பலராலும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து கடந்த வாரம் ஐஷு எலிமினேட் செய்யப்பட்டார்.

பல ட்ரோல்களுக்கு ஆளான ஐஷு, வெளியே வந்தவுடன் தனது பிக்பாஸ் வீடியோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் மனம் நொந்த ஐஷு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் அனைத்து பார்வையாளர்களுக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை நம்பி வாக்களித்த அனைவருக்கும் நான் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளேன். இந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது. என்னைப் போன்ற ஆயிரம் பெண்கள் இந்த நிலைக்கு இறந்திருப்பார்கள்.

நான் என் குடும்பத்திற்கும், நான் பிரதிநிதித்துவப்படுத்த முன் வந்த பெண்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி விட்டேன். நிகழ்ச்சியில் என்னைப் பார்த்ததும் என் மீது எனக்குள்ள மரியாதையை இழந்துவிட்டேன். ஒருவரால் விரும்பப்படுவதும் பொதுமக்களால் மிகவும் வெறுக்கப்படும் என்று எனக்குத் தெரியாது. தவறான செயல்களில் இருந்து என்னை காப்பாற்ற முயன்ற பிரதீப், அர்ச்சனா மற்றும் மணி அண்ணா ஆகியோர்க்கு நன்றி.

aishu post
aishu post

முக்கியமாக பிரதீப் அண்ணாவுக்கு ரெட் கார்டு கொடுத்ததற்கு எனது ஆழ்ந்த மன்னிப்பு. அவருக்கு ரெட் கார்டு கொடுத்ததை பற்றி நான் இப்போது வருத்தப்படுகிறேன். அவர் யாருக்கும் துரோகம் செய்யவில்லை எனவே அவர் வெளியே வந்தது வேதனையாக இருக்கிறது. “நிக்சனை ஆதரித்தவர்களுக்கு மன்னிக்கவும். நான் வெளியேற்றப்பட்ட பிறகு அவர் இன்னும் சிறப்பாக விளையாடுவார்.

வீட்டிற்குள் நான் செய்த எந்த செயலையும் நியாயப்படுத்த விரும்பவில்லை. என் குடும்பத்தை தனியாக விடுங்கள், நான் நிறைய படிக்கிறேன் கருத்துகள் மற்றும் சமூக ஊடகங்களில் என்னைப் பற்றிய திட்டி வரும் வீடியோக்களை பார்த்தேன். என்னை பற்றி மற்றும் பேசுங்கள் என்னுடைய குடும்பங்களை விட்டுவிடுங்கள். நான் நிகழ்ச்சிக்கு தகுதியானவள் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். கோபம், காதல் பொறாமை, நட்பு என் விளையாட்டை முழுவதுமாக கண்மூடித்தனமாக்கி விட்டது. ஏற்கனவே நான் உயிரை விட துணிந்தேன். அனைத்திற்கும் மன்னித்துவிடுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com