"பிக்பாஸில் பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்ததுக்கு இதான் காரணம்" டைட்டில் வின்னர் அர்ச்சனா முதல் பேட்டி!

Biggboss archana
Biggboss archana

பிக்பாஸ் 7 டைட்டில் வின்னராகி வெளியே வந்த அர்ச்சனா முதல் முறையாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்ட பிக்பாஸ் 6 சீசன்களை கடந்து 7வது சீசனுக்குள் அடியெடுத்து வைத்தது. கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் 7 கடந்த வாரம் முடிவடைந்தது. இந்த சீசனில் அர்ச்சனா வின்னராகவும், மணி ரன்னராகவும் அறிவிக்கப்பட்டார்.

இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது பிக்பாஸ் 7. அப்படிப்பட்ட இந்த சீசனில் இரு ரசிகர்கள் பட்டாளம் இருந்தனர். புல்லி கேங் தலைவியான மாயாவிற்கு ஒரு கூட்டமும், அர்ச்சனாவிற்கு ஒரு கூட்டமும் இருந்தது. இந்த நிலையில் வெளியே வந்த அனைத்து போட்டியாளர்களும் ரசிகர்களுடன் லைவ்வில் உரையாடிய நிலையில் அர்ச்சனாவை மட்டும் காணவில்லை என்று சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில் டைட்டில் வின்னர் அர்ச்சனா தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், மாயா ரன்னராகாது தனக்கு அதிர்ச்சியளித்ததாகவும், பிரதீப் ரெட் கார்ட் சம்பவத்தால் தான் மாயா தோற்றதாகவும் தெரிவித்தார்.

மேலும் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டதற்கு காரணம் என்னவாகும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பிரதீப் ஒரு ஸ்ட்ராங் ப்ளேயர் என்பதால் நேரம் பார்த்து அனைவரும் ஒன்று கூடி பெண்கள் பாதுகாப்பு என்ற ஒன்றை கையிலெடுத்து அவரை வெளியே அனுப்பிவிட்டார்கள் என்று கூறினார். இதனை பார்த்த பிரதீப் ரசிகர்கள் அர்ச்சனாவுக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com