தினேஷுடன் வந்த சண்டையால் பிரபல நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய விசித்ரா!

விசித்ரா - தினேஷ்
விசித்ரா - தினேஷ்

பிக்பாஸ் 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக ஓடியது. எந்த சீசனிலும் இல்லாத ரசிகர்கள் பட்டாளம் இந்த சீசனில் தான் இருந்தது. இந்த சீசனில் கடைசி வரை சண்டை சச்சரவுகள் தொடர்ந்து வந்தது. அப்படி இருவர் தான் விசித்ரா, தினேஷ்.

ஒவ்வொருவரும் பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு சகஜமாக மாறிவிட்டனர். ஆனால் வெளியே வந்த பிறகும் இருவரும் சண்டையை தொடர்ந்து வருகின்றனர். ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே விசித்ரா தினேஷின் தனிப்பட்ட வாழ்க்கையை கிளறி விமர்சித்திருப்பார். இதற்கு தினேஷின் மனைவியும் நடிகையுமான ரச்சிதாவும் ஆதரவு தெரிவிக்கிறார்.

வீட்டிற்குள் இருந்த தினேஷ் வெளியே வந்த பிறகு எப்படியாவது மனைவியுடன் மீண்டும் சேர்ந்துவிடுவேன் என நம்பிக்கையாக இருந்தார். ஆனால் இது தொடர்கதையாக தான் உள்ளது. இந்த நிலையில் பிரபல விஜய் டிவியில் ஒளிப்பரபாகி வரும் அண்டகாகசம் நிகழ்ச்சியில் பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில், விசித்ராவும், தினேஷும் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மொத்தம் இரண்டு டீம்களாக பிரிக்கப்படுவார்கள். இந்தநிலையில் தான் தினேஷ் மற்றும் விசித்ரா ஆகியோர் இரு அணிகளாக பிரிக்கபட்டனர். அப்போது விசித்ரா, தினேஷ் எனது அணியில் தான் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
அனுமன் ஏன் பஞ்சமுக அவதாரம் எடுத்தார் தெரியுமா?
விசித்ரா - தினேஷ்

இதனால் கடுப்பான தினேஷ், ஏற்கனவே அவர் வீட்டிற்குள் இருக்கும் போது எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியதால் அவரின் டீமில் இருக்க முடியாது என தெரிவித்துள்ளார். இதையடுத்து விசித்ரா, நிகழ்ச்சி குழுவிடம் சண்டையிட்டுள்ளாராம். அப்போது அவர்கள் இது ஃபன் ஷோதான். எந்த டீமில் இருந்தாலும் பிரச்சனை இல்லை என்று எவ்வளவு எடுத்து கூறியும் விசித்ரா கடுப்பாகி வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com