"அலப்பறை கெளப்புறோம்" பிக்பாஸ் மணிக்கு ரசிகர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்!

mani ravichandra
mani ravichandra

பிக்பாஸில் ரன்னராக அறிவிக்கப்பட்ட மணிக்கு ரசிகர்கள் கொடுத்த சர்ப்ரைஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசனுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இதுவரை 6 சீசன்கள் கடந்த நிலையில் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி 7வது சீசன் தொடங்கியது. பல பல டவிஸ்ட்களை அடுக்கி தள்ளிய இந்த சீசனில் கடைசி வரை அந்த ட்விஸ்ட் நீடித்தது. 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டு அசத்தலாக விளையாடிய நிலையில் தினேஷ், மாயா, அர்ச்சனா, மணி, விஷ்ணு ஆகியோர் டாப் 5 போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து 2வது ரன்னராக மாயாவும், 3வது ரன்னராக தினேஷும், 4வது ரன்னராக விஷ்ணுவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அர்ச்சனா வின்னராகவும், மணி ரன்னராகவும் அறிவிக்கப்பட்டார். சமூக வலைதள பக்கம் ஆளே காணவில்லை என்று சொல்லப்பட்ட அர்ச்சனா, இன்று தான் முதன் முறையாக விஜய் டிவியில் லைவ் வந்தார். தொடர்ந்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றும் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ரன்னரான மணிக்கு ரசிகர்கள் கொடுத்த சர்ப்ரைஸ் வீடியோவை அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

அர்ச்சனாவை தொடர்ந்து மக்கள் மனதில் அதிகம் இடம் பிடித்தவர் தான் மணி. நடனத்தின் மூலம் விஜய் டிவியில் நுழைந்து பிரபலமான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது உண்மையான கேரக்டர் மூலம் மக்களை கவர்ந்துவிட்டார். அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், லவ் யூ ஆல், நான் இது போன்ற அன்பை எதிர்பார்க்கவில்லை என மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com