பிரதீப் ஆண்டனி - மாயா
பிரதீப் ஆண்டனி - மாயா

விஸ்வரூபம் எடுத்த பிக்பாஸ் பிரச்சனை.. மாயாவுக்கு செக் வைத்த பிரதீப் ஆண்டனி!

ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி மாயாவுக்காக போட்ட பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 7வது சீசன் கடந்த 2 நாடகளுக்கு முன்பு முடிவடைந்தது. இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர், தொடர்ந்து வைல்டு கார்டு போட்டியாளராக 5 போட்டியாளர்கள் அனுப்பப்பட்டனர். இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனுக்கு அதிக பார்வையாளர்கள் உள்ளனர்.

இறுதியாக அதிக வாக்குகளை பெற்று அர்ச்சனா வெற்றிபெற்றார், தொடர்ந்து மணி ரன்னராக அறிவிக்கப்பட்டார். இதில் புல்லி கேங் அதிகம் எதிர்ப்பார்த்த மாயா 2வது ரன்னராக அறிவிக்கப்பட்டு மேடையில் இருந்து வெளியேறினார்.

தற்போது நிகழ்ச்சி முடிந்து இருக்கும் நிலையில், பிரதீப் ஆண்டனி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ஹாய் மாயா, லைப்லாம் எப்படி போகுது? நீ நல்லா இருப்பனு தெரியும். என்னுடைய நட்பின் மதிப்பு 50 லட்சம். நான் அவ்வளோலாம் வொர்த் இல்லனு நீ நினைச்சா. நான் புரிஞ்சிக்கிறேன். உன்னோட விளையாண்டது நல்லா இருந்துச்சு. செக் மேட் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

அதாவது ஏற்கனவே ஒரு டாஸ்க்கில் முதலிடத்தில் நின்று கொண்டிருந்த பிரதீப் ஆண்டனியிடம் மாயா தான் ஜெயித்தால் உனக்கு ரூ.50 லட்சத்தை மொத்தமாக கொடுப்பேன் என கூறி முதலிடத்தை விட்டு தர கூறினார். இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து பிரதீப் ஆண்டனி இது போன்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலாக மாயாவும் ஒரு பெரிய கட்டுரையை எழுதி வெளியிட்டுள்ளார். அதில், வெறுப்பை காட்ட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார், இதனை பார்த்த மக்கள், பிரதீப் ஆண்டனி கருத்துக்கு பதில் கூறுங்கள் என தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com