பிக்பாஸில் இன்று டிக்கெட் டு ஃபைனல்ஸ் டாஸ்க் நடைபெறுகிறது.
விஜய் டி.வி.யில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி 80 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒரே வீட்டில் வித்தியாசமான மனநிலைகளை கொண்ட மனிதர்கள் எந்தவிதமான தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் சக மனிதர்களுடன் நடந்துக் கொள்ளும் விதம் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
தினமும் இந்த சீசனில் பல விஷயங்கள் நடைபெற்று வருகிறது. 80 நாட்களை கடந்த பிக்பாஸ் 7இல் கடந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது. இதில் அனைவரின் பெற்றோர்களும், உறவினர்களும் வீட்டிற்கு உள்ளே சென்று அனைவரையும் குதூகலித்தனர். தொடர்ந்து கடந்த வார இறுதியில் சரவண விக்ரம் வெளியேற்றப்பட்டார்.
இந்த வாரம் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கும் நிலையில், இன்று டிக்கெட் டூ பைனல்ஸ் நடைபெறுகிறது. இதில் நடைபெறும் டாஸ்கில் வெற்றி பெறுபவர்கள் நேரடியாக பைனல்ஸுக்கு செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டியாளர்கள் மும்முரமாக டாஸ்க் விளையாடுகிறார்கள். வழக்கம் போல் அடுத்தவனை எப்படி கவுக்கலாம் என ப்ளான் போட்டு சுதப்புகிறார்களா அல்லது ஆர்வமாக விளையாடி போட்டி போட்டு வெற்றி பெறுவார்களா என பொறுத்திருந்து பார்க்கலாம்.