பிக்பாஸிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது. இதுவரை 6 சீசன்கள் முடிந்த நிலையில் 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் வாரத்தில் இருந்தே சர்ச்சையில் சிக்கியவர் மாயா. கடைசி நிமிடம் வரை சென்ற அவர், 2வது ரன்னராக அறிவிக்கப்பட்டார். அர்ச்சனா, மணி, மாயா ஆகிய மூவரும் டாப் 3 போட்டியாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், பரபரப்பாக மேடையில் இருந்து மாயா வெளியேறினார்.
தொடர்ந்து டைட்டில் வின்னராக அர்ச்சனாவும், ரன்னராக மணியும் அறிவிக்கப்பட்டார். வின்னராக அறிவிக்கப்பட்ட அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்சம், ஒரு கார், ஒரு வீடு என அனைத்தும் பரிசாக வழங்கப்பட்டது. அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் அதிகமான நிலையில் அவர் வோட்டிங் அடிப்படையில் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் வெளியேறி வந்த அனைத்து போட்டியாளர்களும் கொண்டாட்டம், ரீயூனியன் என ஒன்றிணைந்து புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் டைட்டில் வின்னர் அர்ச்சனா மட்டும் எங்கே சென்றார் என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
அனைத்து போட்டியாளர்களும் தனித்தனியாக வீடியோவாகவும், அறிக்கையாகவும் மக்களிடம் தங்களது அன்பை வெளிப்படுத்தினர். ஆனால் டைட்டில் வின்னர் ஆன பிறகு அர்ச்சனா யாரையும் கண்டுகொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அர்ச்சனாவுக்கு நடைபெற்ற சர்ப்ரைஸ் நிகழ்ச்சியின் வீடியோ காட்சிகள் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.