வார இறுதியில் வெளுத்து வாங்க தயாரான கமல்.. அடுத்து என்ன நடக்கும்?

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

பிக்பாஸ் 7வது சீசனில் டிக்கெட் டு பினாலே இறுதி நாளை எட்டியது.

விஜய் டி.வி.யில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி 85 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒரே வீட்டில் வித்தியாசமான மனநிலைகளை கொண்ட மனிதர்கள் எந்தவிதமான தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் சக மனிதர்களுடன் நடந்துக் கொள்ளும் விதம் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

தினமும் இந்த சீசனில் பல விஷயங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் முடிந்த நிலையில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே நடைபெறுகிறது. இதுவரை நடைபெற்ற டாஸ்குகளில் விஷ்ணுதான் அதிக பாயிண்ட்ஸ்களை வைத்திருக்கிறார். தொடர்ந்து யார் வெற்றியாளர் என இன்று அறிவிக்கப்படும்/

வார இறுதியான இன்று கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திப்பார். இது தொடர்பாக வெளியான புரோமோக்களில், போட்டியாளர்களை வெளுத்து வாங்க தயாரானது போல் இருக்கிறது. இந்த வாரம் 2 எலிமினேஷன் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாயா தான் வெளியேறுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், ரவீனா இன்று எலிமினேட் செய்யபப்ட்டதாக உறுதியாகியுள்ளது தொடர்ந்து நாளை ஒரு எலிமினேஷன் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com