இறுதிவாரத்தில் பிக்பாஸ்.. சர்ப்ரைஸ் விசிட் கொடுக்கும் எவிக்ட்டான போட்டியாளர்கள்!

பிக்பாஸ் போட்டியாளர்கள்
பிக்பாஸ் போட்டியாளர்கள்

பிக்பாஸ் 7வது சீசனில் இன்று வெளியேறிய போட்டியாளர்கள் உள்ளே சர்ப்ரைஸாக வருகிறார்கள்.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். விதிப்படி பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்க வேண்டும். பிக்பாஸ் கடந்த ஆறு சீசன்களுமே மிக விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்ததால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே இந்நிகழ்ச்சி உருவாக்கிக்கொண்டது.

பிக்பாஸின் 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசன் விறுவிறுப்பாக 100 நாட்களை கடந்து ஓடி கொண்டிருக்கும் நிலையில், ஆட்டம் சூடு பிடிக்கிறது. இன்னும் பைனல்ஸ்க்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

கடந்த வாரம் விசித்ரா எலிமினேட் ஆன நிலையில், தற்போது 6 பேர் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் 100-வது நாளான இன்று போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸாக எவிக்டான போடியாளர்கள் மீண்டும் உள்ளே வருகிறார்கள். அப்போது வந்த அவர்கள் வெளியில் நடப்பதை பற்றி பேசுகிறார்கள். இதனால் இந்த ஒருவாரத்தில் என்னவெல்லாம் மாற்றம் ஆகும் என்பதை பார்க்கலாம்.

முதலில் சத்தமில்லாமல் உள்ளே வரும் அனன்யா ராவ் போட்டியாளர்களை பயமுறுத்துகிறார். தொடர்ந்து வந்த அக்‌ஷயா போட்டியாளர்களுடன் டான்ஸ் ஆடி வைப் செய்கிறார். இதற்கடுத்து உள்ளே வந்த வினுஷா நிக்‌ஷன் பிரச்சனை குறித்து பேசுகிறார். அப்போது அர்ச்சனாவிடம் பேசிய அவர், உங்களுக்கு ஒரு பிரச்னை வரும் போது என் பேர யூஸ் பன்னி நீங்க நிக்சன டார்கெட் பன்றீங்க.. இந்த விசயத்த அர்ச்சனா அப்பவே பன்னி இருக்கலாமே ஏன் பன்னல என்று கேட்க நான் சின்னப்புள்ள தனமா பன்னிட்டேன் என்று அர்ச்சனா கூற எனக்கு அது பிடிக்கவில்லை என்று கூறினார். தொடர்ந்து விக்ர, ஜோவிகா, நிக்சனும் உள்ளே வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com