பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார நாமினேஷன் ப்ராஸஸ் இன்று நடைபெறுகிறது.
விஜய் டி.வி.யில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒரே வீட்டில் வித்தியாசமான மனநிலைகளை கொண்ட மனிதர்கள் எந்தவிதமான தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் சக மனிதர்களுடன் நடந்துக் கொள்ளும் விதம் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக 6 சீசன்களை கடந்து 7வது சீசன் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியுள்ளது. தினமும் இந்த சீசனில் பல விஷயங்கள் நடைபெற்று வருகிறது. 90 நாட்களை கடந்த பிக்பாஸ் 7 ஃபைனல்ஸை நெருங்கி வருகிறது. அனைத்து போட்டியாளர்களும் விறுவிறுப்பாக விளையாடி வரும் நிலையில், கடந்த வார இறுதியில் ரவீனாவும், நிக்சனும் எலிமினேட் செய்யப்பட்டனர். ஒரே நாளில் டபுள் எவிக்சன் அறிவித்து அனைவரையும் ஷாக்கில் ஆழ்த்தினார் கமல்ஹாசன்.
தொடர்ந்து இந்தவார நாமினேஷன் ப்ராஸஸ் இன்று நடைபெறுகிறது. இது தொடர்பாக வெளியான புரோமோவில், சண்டையிடுவது போல் ஒரு மேடையை அமைத்து யார் நாக் அவுட் செய்யப்படுகிறார்களோ அவர்கள்தான் நாமினேட் செய்யப்படுவதாக அறிவிக்கிறார்.தொடர்ந்து போட்டியாளர்களும் ஒருவரையொருவர் எதிராக மோதி கொள்வதற்கு தயாரானார்கள். அனைவரும் போட்டியாளர்களை தேர்வு செய்த பிறகு பிக்பாஸ் அனைவருக்கும் ஒரு ட்விஸ்ட் வைத்தது. அதாவது இந்த வாரம் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.