பிக்பாஸ் 7வது சீசன் தொடங்கி 48வது நாள் சென்று கொண்டிருக்கும் நிலையில் நடிகர் கமல்ஹாசன் இன்று அனைவரையும் லெப் ரைட் வாங்குகிறார்.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 7வது சீசன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த வாரத்திற்கு முதல் வாரம் சமூக வலைதள பக்கம் சென்றாலே பிக்பாஸ் என்றுதான் வரும்.
அந்த அளவிற்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது பிரதீப் சம்பவம். பெண்கள் பாதுகாப்பு என்று கூறி பலராலும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பிரதீப் வெளியேற்றப்பட்டார்.இதற்கு பொதுமக்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். தொடர்ந்து கடந்த வாரம் மாயா கேப்டன்சியில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது.
இந்த 2 பிரச்சனைகளுக்கும் சேர்த்து கமல்ஹாசன் கடந்த வார இறுதியில் அனைவரையும் வெளுத்து வாங்கினார். இந்த நிலையில் இந்த வாரம் கேப்டனாக தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.சூப்பர் கேப்டன்சி என்ற அளவிற்கு நல்ல பெயரை வாங்கினார்.
ஆனால் மாயாவின் சூழ்ச்சியால் பிக்பாஸ் ஹவுஸில் பல பிரச்சனைகள் எழுந்து வந்தது. இந்த நிலையில் இன்று கானா பாலா எலிமினேட் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வைல்டு கார்டு மூலம் எண்ட்ரி ஆன குறைந்த நாட்களிலேயே அன்ன பாரதி வெளியான நிலையில், மேலும் ஒரு வைல்டு கார்டு கண்டஸ்டெண்ட் எலிமினேட் செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து வெளியான இன்றைய புரோமோக்களில் நடிகர் கமல்ஹாசன், விசித்ரா அர்ச்சனா விஸ்வரூபம் எடுத்தது பற்றி கிளறுகிறார். இதில் அனைவரையும் அடுக்கடுக்கான கேள்விகளால் திணறடிக்கிறார். மேலும் என்ன நடக்கும் என்பதை இன்றைய எபிசோட்டிலேயே பார்க்க முடியும்.