முட்டி கொண்ட விஷ்ணு - தினேஷ்.. வேடிக்கை பார்க்கும் ஹவுஸ்மேட்ஸ்!

Bigg boss dinesh
Bigg boss dinesh

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

பிக்பாஸ் 7வது சீசன் தொடங்கி 45வது நாள் சென்று கொண்டிருக்கும் நிலையில், ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஒருவரின் வேடத்தை அணிந்து கலக்கி வருகின்றனர்.

விஜய் டிவியின்  பிக்பாஸ்  நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 7வது சீசன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த வாரத்திற்கு முதல் வாரம் சமூக வலைதள பக்கம் சென்றாலே பிக்பாஸ் என்றுதான் வரும் . அந்த அளவிற்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது பிரதீப் சம்பவம். பெண்கள் பாதுகாப்பு என்று கூறி பலராலும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பிரதீப் வெளியேற்றப்பட்டார்.

இதற்கு பொதுமக்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். தொடர்ந்து கடந்த வாரம் மாயா கேப்டன்சியில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்த 2 பிரச்சனைகளுக்கும் சேர்த்து கமல்ஹாசன் கடந்த வார இறுதியில் அனைவரையும் லெஃப்ட் ரைட் வாங்கினார்.

தொடர்ந்து இந்த வார கேப்டனாக தினேஷ் தேர்வு செய்யப்பட்டார். கடந்த வாரம் அனுபவித்த அனைத்தையும் திருப்பி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய எபிசோட்டில் விஷ்ணுவை காட்டமாக பேசினார். இது தொடர்பான புரோமோ வெளியாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com