பிக்பாஸில் இருந்து பாதியில் வெளியேறியவர்கள் யார் யார் தெரியுமா?

Bigg Boss - Season 7
Bigg Boss - Season 7
Published on

பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 100 நாட்கள் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்படும் போட்டியாளர்களுக்குள் நடைபெறும் போட்டிகள், வாக்குவாதங்கள், சண்டை சச்சரவுகளே முக்கிய அம்சமாக கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பப்பட்டாலும், தமிழில் கூடுதல் பார்வையாளர்களை கவர்ந்து முன்னணி நிகழ்ச்சியாக இருக்கிறது.

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து 7 சீசன்களாக நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு நாளொன்றிற்கு சம்பளம் வழங்கப்படுவதோடு, வெற்றி பெறும் போட்டியாருக்கு பெரிய அளவிலான பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

மேலும் அதிக பார்வையாளர்களைக் கொண்ட நிகழ்ச்சியாக இருப்பதால் பெரிய அளவில் பப்ளிசிட்டி கிடைப்பதால் பல முன்னணி நடிகர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே நேரம் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர் பல்வேறு காரணங்களை கூறி போட்டியிலிருந்து பாதியில் வெளியேறிய சம்பவமும் ஒவ்வொரு சீசனிலும் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் இருக்கிறது.

இவ்வாறு தற்போது நடைபெற்று வரும் 7வது சீசன் வரை பாதியில் வெளியேறிய போட்டியாளர்கள் குறித்து பார்ப்போம்.

பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக களம் கண்ட நடிகர் ஸ்ரீ தொடர்ந்து இந்த வீட்டில் என்னால் இருக்க முடியாது என்று கூறி தானாக முன்வந்து வெளியேறினார். நகைச்சுவை நடிகர் பரணி பிக் பாஸ் வீட்டில் உள்ள தடுப்பு சுவரில் இருந்து ஏறி குதித்து தப்பிக்க முயன்றார், பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே அவரை போட்டியிலிருந்து வெளியேற்றினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்த நடிகை ஓவியா நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலை செய்ய முயன்றதை அடுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். மேலும் அந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஓவியா ஆர்மி என்று மிகப்பெரிய ரசிகர் வட்டமே உருவானதும் குறிப்பிடத்தக்கது.

3வது சீசனில் நடிகை மதுமிதா கையை கிழித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததை அடுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். 5வது சீசனில் முதல் திருநங்கை போட்டியாளராக களம் இறங்கிய நமிதா மாரிமுத்து நிகழ்ச்சியில் இருந்து தானாக வெளியேறினார். சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமடைந்த ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் தனது மகனை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று கூறி போட்டியில் இருந்து வெளியேறினார். தற்போது சீசன் 7 களமிறங்கிய பிரபல கதை சொல்லியும், எழுத்தாளரும், நடிகருமான பவா செல்லதுரை தானாக முன்வந்து போட்டியிலிருந்து வெளியேறி உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com