காதலியை அறிமுகம் செய்த பிக்பாஸ் அபிஷேக்.. வைரலாகும் போட்டோ!

அபிஷேக் ராஜா
அபிஷேக் ராஜா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான அபிஷேக் ராஜா, தனது காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்குதோ, இல்லையோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பிரபலம் கிடைத்து விடுகிறது. யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருபவர் தான் அபிஷேக் ராஜா. படங்களை விமர்சனம் செய்து வருகிறார். இவர், சில சினிமா பிரபலங்களை பெட்டியும் எடுத்திருக்கிறார். இதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஜாலியாக அரட்டை அடிப்பது, கலகலப்பாக இருப்பது போன்றவற்றை வாடிக்கையாக கொண்டிருந்தனர். இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்ற அபிஷேக் ராஜா ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். இது அவருக்கு நெகட்டிவாக மாறியது. ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரிய பிரபலத்தை பெற்று தந்தது.

அஜய் ஞானமுத்து இயக்கிய 'இமைக்கா நொடிகள்' படத்தில் கதாநாயகனின் பாய் பெஸ்டியாக நடித்திருந்தார். இந்த நிலையில், காதலர் தினமான இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

அதில், குறைகள் உள்ள என்னை ஒரு பார்ட்னராக மாற்றியதற்கும், என்னை விட்டு கொடுக்காததிற்கு நன்றி. இனிய காதலர் தின வாழ்த்துக்கள் ஸ்வாதி என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

அபிஷேக் ராஜா தீபா என்வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களிலே இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com