பிக்பாஸ் 7:வைல் கார்டு போட்டியாளரை அழவைத்த மாயா!

BIGG BOSS SESON 7 TAMIL
BIGG BOSS SESON 7 TAMIL

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோவில் ஐந்து வைல்கார்டு போட்டியாளர்களும் முதல் வாரமே ஸ்மால்பாஸ் வீட்டிற்குள் அனுப்பிவைக்கப்படுகிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 7 கமல்ஹாசனால் தொகுக்கப்பட்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பட்டு வருகிறது. கடந்த ஆறு சீசன்களும் மிக சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் சென்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே பிக்பாஸ் நிகழ்ச்சி உருவாக்கிக்கொண்டது.

அதனையடுத்து பிக்பாஸ் சீசன் 7 சற்று மாறுப்பட்ட விதிமுறைகளைக் கொண்டிருந்தது. அதாவது பிக்பாஸ் வீட்டையே பிக்பாஸ் வீடு, ஸ்மால்பாஸ் வீடு என இரு வீடுகளாக பிரித்தனர்.பிக்பாஸ் வீட்டில் சரியாக வேலை செய்யாத ஆறு போட்டியாளர்கள் கேப்டனால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்மால்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

ஸ்மால்பாஸ் வீட்டில் உள்ளவர்களே சமையல் மற்றும் சுத்தம் செய்யும் அனைத்து வேலைகளும் செய்ய வேண்டும். மேலும் அவர்கள் எந்த போட்டிகளிலும் கலந்துக்கொள்ள கூடாது. பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் ஸ்மால்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என்பது விதிமுறை.

அந்தவகையில் கடந்த வாரத்தின் கேப்டனாக பூர்னிமா ரவி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் யுகேந்திரன் மற்றும் வினுஷா எலிமினேட் செய்யப்பட்டார்கள். இதையடுத்து இந்த வாரத்தின் கேப்டனாக இரண்டாவது முறையாக பூர்னிமா ரவியே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வாரத்தில் சற்றும் எதிர்பாராவிதமாக இரண்டு போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆனார்கள். மேலும் தினேஷ் கோபால்சாமி, வி.ஜே அர்ச்சனா, அன்னபாரதி, காணா பாலா, ஆர்.ஜே பிராவோ ஆகியோர் வைல் கார்டு என்ட்ரி கொடுத்தார்கள். ஆனால்அது பிக்பாஸ் வீட்டு போட்டியாளர்களுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. வைல் கார்டு போட்டியாளர்கள் ஐந்து பேருமே பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் நல்ல வரவேற்பை தருவார்கள் என எதிர்ப்பார்த்தார்கள். வைல் கார்ட் போட்டியாளர்களின் முதல் நாளே மிக சண்டை சச்சரவுகளுடன் ஆரம்பம் ஆகியிருக்கிறது.

இந்நிலையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியானது. அதில் கேப்டன் பூர்னிமா ரவி நம்பாத ஆறு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து ஸ்மால்பாஸ் வீட்டிற்கு அனுப்பிவைக்க பிக்பாஸ் கூறுகிறார். அதன்படி பூர்னிமா ரவி வைல் கார்டு என்ட்ரி கொடுத்த ஐந்து பேரையுமே தேர்ந்தெடுக்கிறார். கூடுதலாக ஏற்கனவே விளையாடி வந்த விச்சித்திராவையும் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கிறார். அதனால் வைல்கார்டு போட்டியாளர்களுக்கும் பூர்னிமா ரவிக்கும் பலத்த சண்டை ஏற்படுகிறது. பூர்னிமா ரவி வேண்டுமென்றே ப்ளான் செய்துதான் அவர்களை அனுப்பி வைப்பதாக அவரே ஒப்புக்கொள்கிறார்.

புது போட்டியாளர்களும் பழைய போட்டியாளர்களும் இரு வீட்டில் தனிதனியாக இருந்து சண்டையிடுகிறார்கள். வேண்டுமென்றே வைல்கார்ட் போட்டியாளர்களை ஸ்மால்பாஸ் வீட்டில் அனுப்பி வைத்தது சரியா தவறா என்பதை பற்றி நிச்சயம் கமலஹாசன் வாரத்தின் இறுதியில் கேட்க வேண்டும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com