இன்று பிக்பாஸ் 7-இல் இவர் தான் எலிமினேட்டா? ரசிகர்கள் ஷாக்!

JOVIKA
JOVIKA

இன்றைய எபிசோடில் ஜோவிகா விஜயக்குமார் எலிமினேட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்7 ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். விதிப்படி பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்க வேண்டும். பிக்பாஸ் கடந்த ஆறு சீசன்களுமே மிக விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்ததால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே இந்நிகழ்ச்சி உருவாக்கிக்கொண்டது.

இதையடுத்து பிக்பாஸ் 7 எப்போது வரும் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. அதைவிட யார் போட்டியாளர்களாக இருப்பார்கள் என பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது.

இதையடுத்து அக்டோபர் 1ம் தேதி பிக்பாஸ் சீசன் 7 தொடங்கியது. இந்த சீசனில் புது விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அதாவது பிக்பாஸ் வீடு ஸ்மால் பாஸ் வீடு என இரு வீடுகளாகப் பிரித்தனர். பிக்பாஸ் வீட்டில் சரியாக விளையாடாத ஆறு போட்டியாளர்களை கேப்டனால் தேர்ந்தெடுத்து ஸ்மால்பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

ஸ்மால்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் வீட்டின் அனைத்து வேலைகளையுமே செய்ய வேண்டும். மேலும் எந்த போட்டிகளிலுமே விளையாடக் கூடாது. பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் ஸ்மால்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என்பது விதிமுறை.

ஏற்கனவே வைல்டு கார்டு மூலம் 5 பேர் உள்ளே வந்த நிலையில், தற்போது ஏற்கனவே வெளியில் சென்ற விஜய் வர்மா மற்றும் அனன்யா ராவ், மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்துள்ளனர். வெளியில் நடப்பதை நன்கு அறிந்து உள்ளே வந்ததால் ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இவர்கள் உள்ளே சென்று 1 வாரம் ஆன நிலையில் இன்று சனிக்கிழமை ஜோவிகா எலிமினேட் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே ஜோவிகா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

க்ரூப் ஃபார்மால் தன் சுய தகுதியை இழந்து விட்டதாக பலரும் குற்றஞ்சாட்டினர். இந்த நிலையில் நேற்று என் அம்மாவிடம் செல்கிறேன் என கதறி அழுதார். தொடர்ந்து இன்று அவர் எலிமினேட் செய்யப்படுவது பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.மேலும் கடந்த வாரம் கமல்ஹாசன் பூர்ணிமாவை வெளுத்து வாங்கியதை தொடர்ந்து இந்த வாரம் மாயாவை லெப்ட் ரைட் வாங்குகிறார். இது தொடர்பான புரோமோ காட்சிகள் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com