பிக் பாஸ் சீசன் 7: ஆண்டவரின் அடுக்கடுக்கான கேள்விகள்.. பதற்றத்தில் பிக்பாஸ் வீடு!

பிக் பாஸ் சீசன் 7: ஆண்டவரின் அடுக்கடுக்கான கேள்விகள்.. பதற்றத்தில் பிக்பாஸ் வீடு!

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வெளியான ப்ரோமோவில் கமலஹாசன் போட்டியாளர்களிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு திக்கு முக்காட செய்கிறார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடிகர் கமலஹாசனால் தொகுக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஒளிப்பரப்பப்பட்ட ஆறு சீசன்கள் மிக சுவாரசியமாகவும் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமலும் சென்றது. பிக்பாஸ் ஆறு சீசன்களிலையே தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டது.

பிக்பாஸ் சீசன் 7ல் புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அதாவது பிக்பாஸ் வீட்டில் சரியாக விளையாடாத ஆறு போட்டியாளர்களை கேப்டனால் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு வாரமும் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஸ்மால்பாஸ் வீட்டில் உள்ளவர்கள்தான் சமையல் , சுத்தம் செய்தல் என அனைத்து வேலைகளும் செய்ய வேண்டும்.

பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் எந்த உதவியும் செய்யக்கூடாது என்பது விதிமுறை. அதேபோல் ஸ்மால்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் எந்த போட்டியிலுமே பங்கேற்க கூடாது.

அந்தவகையில் இந்த வாரத்தின் கேப்டனாக பூர்னிமா ரவி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரை சிறிதும் மதிக்காமல் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் சென்று ஆட்டம் போட்டனர். அதையடுத்து இன்று கமலஹாசன் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை சந்திக்கவிருக்கிறார்.

இன்று வெளியான ப்ரோமோவில் பூர்னிமா ரவியின் கேப்டன்ஸி பற்றி கேட்டதற்கு பிரதீப் மற்றும் நிக்ஷன் அவர் சரியாக வீட்டாளர்களை கட்டுபாட்டிற்குள் வைத்துக்கொள்ளவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம் வைக்கிறார் என்று குற்றம் சாட்டினார்கள்.

இன்னொரு ப்ரோமோவில் விளையாட்டின்போது விஷ்னுவை அக்ஷயா வேண்டுமென்றே தள்ளிவிட்டதாக விஷ்னு கூறினார். அதற்கு ஆண்டவர் அந்த ஏவியை மீண்டும் போட்டு காட்டி ஒரு தீர்ப்பளிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அடுத்த ப்ரோமோவில் நடிகர் கமலஹாசன் அடுக்கடுக்கான கேள்விகளை போட்டியாளரிகளிடம் முன் வைக்கிறார். அதவாது ”ஏன் ஒருவர் மற்றொரு போட்டியாளர்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும். பட்டம் உனக்கு பதவி எனக்கு என்ற ஒப்பந்தம் எல்லாம் எதற்கு?விதிமுறையை சரியாகத்தான் பின்பற்றுகிறீர்களா?, பிக் பாஸ் வீட்டில் எதற்கு இந்த மிடில் கிளாஸ் ,ஹை கிளாஸ் போட்டி எல்லாம்” என்ற பல காரசாரமான கேள்விகளை முன்வைக்கிறார்.

இதற்கு பதலளிக்க முடியாமல் பயத்தில் உள்ளனர் பிக்பாஸ் வீட்டாளர்கள். என்ன பதில் அவர்கள் தரப்போகிறார்கள் என ஆவலுடன் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com