விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களைக் கடந்து தற்போது 7 வது சீசனை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் புதுவிதமாக நிறைய விஷயங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். அதில் ஒன்று தான் ஸ்மால் பாஸ், பிக்பாஸ் கான்செப்ட். இது அனைவருக்கும் பிடித்து போக தொடர்ந்து பல பல புது விஷயங்களை கொண்டுவருகிறார்கள். சமீபத்தில் கூட ஏற்கனவே வெளியேறிய 2 போட்டியாளர்களை மீண்டும் வைல்டு கார்டு மூலம் அனுமதித்துள்ளார்கள். அப்படி உள்ளே வந்தவர்கள் தான் அனன்யா ராவ், விஜய் வர்மா. இருவரும் வெளியே ஆட்டத்தை நன்றாக ரசித்த பிறகு உள்ளே வந்துள்ளதால் பிக்பாஸ் வீடே பற்றி எரிகிறது.
இந்த சீசனில் பலராலும் பேசப்பட்ட ஒரு விஷயம் பிரதீப் ரெட்கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டது தான். இந்த பிரச்சனை பூகம்பமாய் கிளம்ப, பிரதீப்போ தன் வேலையை பார்க்க அயல்நாட்டிற்கு சென்றுவிட்டார். இது ஒரு புறம் இருக்க வனிதவை பிரதீப் ஆதரவாளர் தாக்கிவிட்டதாக வனிதா புகார் தெரிவித்தார். இதற்கு பிரதீப் ஆண்டனியும் மன்னிப்பு கோரினார்.
தொடர்ந்து தற்போது பிரதீப் ஆண்டனி புலம்பிய படி கோபி சுதாகரின் வீடியோ ஒன்றை பதிவிட்டு ட்வீட் செய்துள்ளார். அதில், வாராவாரம் வெளிய வர கண்டெஸ்டண்ட்ஸ இப்படி தான் மனிச்சுக்கிட்டு இருக்கேன், பேசாம பொம்பள பொருக்கினு ஒத்துக்கிட்டா கூட நிம்மதியா இருக்கலாம் போல, எழுத விடுங்க ப்ளீஸ், நான் மனசுல வச்சுக்கல மனிச்சுட்டேன். என் பிரச்னை எனது, உங்க பிரச்னை உங்களது" என்று பதிவிட்டுள்ளார். மேலும், இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு என்றும் ஹேஷ்டேக் பதிவிட்டுள்ளார்.