விசித்ரா
விசித்ரா

சர்ப்ரைஸ் கொடுத்த மகன்கள்.. ஷாக்கில் உறைந்த விசித்ரா!

Published on

பிக்பாஸில் இன்று உள்ளே வரும் விசித்ராவின் குடும்பத்தாரால் அவர் மகிழ்ச்சியில் திழைக்கிறார்.

பிக்பாஸ் 7வது சீசனில் பல எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 சீசன்களில் இல்லாத பல விஷயங்கள் இந்த சீசனில் பார்க்க முடிகிறது. முதலில் இந்த சீசனில் 2 வீடுகள் உருவாக்கப்பட்டது. பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என இரு வீடுகள் உருவாக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி பிக்பாஸ் 7வது சீசன் தொடங்கி தற்போது 80 நாட்களை கடந்து ஓடி கொண்டிருக்கிறது.

தினசரி புரோமோக்கள் வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டி வரும் நிலையில், இன்றைய புரோமோக்கள் வெளியாகியுள்ளது. அதாவது இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. தினசரி போட்டியாளர்களின் குடும்பத்தார்கள் உள்ளே சென்று அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி் வருகிறார்கள்.

அந்த வகையில், இன்று விசித்ராவின் கணவர் மற்றும் மகன்கள் உள்ளே வருகிறார்கள். ஏற்கனவே பூகம்பம் டாஸ்க்கில் கணவரின் நற்செயல் குறித்து உலகம் முழுவதும் விசித்ரா தெரிவிக்க, மேடையிலேயே வைத்து விசித்ராவின் கணவருக்கு கமல்ஹாசன் வாழ்த்து கூறினார்.

இன்றைய புரோமோவில், விசித்ராவை தவிர அனைவரும் ரிலீஸ் என தெரிவிக்கிறார் பிக்பாஸ். உடனே கையில் பூச்செண்டுடன் உள்ளே வரும் விசித்ராவின் கணவரை பார்த்து அவர் குழந்தை போல் கதறி அழுகிறார். தொடர்ந்து பிக்பாஸ் அவரை கன்பெக்சன் ரூம் வாருங்கள் என அழைத்தார். வெளியே வந்து பார்த்த விசித்ராவை அவரது மகன்கள் சர்ப்ரைஸ் செய்து அசத்தியுள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com