இந்த வார நாமினேஷன் லிஸ்ட்.. யார் தெரியுமா?

பூர்ணிமா
பூர்ணிமா
Published on

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்7 ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். விதிப்படி பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்க வேண்டும். பிக்பாஸ் கடந்த ஆறு சீசன்களுமே மிக விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்ததால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே இந்நிகழ்ச்சி உருவாக்கிக்கொண்டது.

இதையடுத்து பிக்பாஸ் 7 தொடங்கப்பட்டு அட்டகாசமாக ஓடி கொண்டிருக்கிறது. புது விதமாக இந்த சீசனில் மட்டும் பிக்பாஸ் ஸ்மால் பாஸ் என்ற கான்சப்ட்டை கொண்டு வந்தனர். அதாவது கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு பிடிக்காதவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுவார்கள். அவர்களே பிக்பாஸ் வீட்டாருக்கு அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பார்கள்.

இப்படி சுவாரஸ்யமாக நகர்ந்து கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 7ல் கடந்த வாரம் மிகப்பெரிய புரட்சி நடந்தது என்றே சொல்லலாம். அதாவது பெண் சுதந்திரம் என்ற பெயரில், அனைவராலும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். இதற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளித்து கருத்து பதிவிட, அனைவரின் வாயை அடைக்கும் விதமாக நேற்று முன் தினம் கமல்ஹாசன் அதிரடி காட்டியுள்ளார். அனைவரின் கேள்விகளுக்கும் விளக்கம் கொடுத்து அடுத்தடுத்து குறும்படங்களை போட்டு மிரட்டினார். இதனால் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கதிகலங்கியுள்ளனர். தொடர்ந்து நேற்றைய்அ எபிசோட்டில் ஐஷு வெளியேறினார்.

இந்த வாரம் தொடங்கிய நிலையில், நாமினேஷன் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான புரோமோவில், பலரும் பூர்ணிமா, விக்ரம், ப்ராவோ, அக்‌ஷயா ஆகியோரை ஹவுஸ்மேட்ஸ் தேர்ந்தெடுக்கின்றனர். வரும் வாரத்தில் இவர்களில் யார் வெளியேறுவார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com