கடைசி வாரம்.. பிக்பாஸ் வீட்டில் நடந்த குட்டி கலாட்டா.. கடுப்பான அர்ச்சனா!!

Bigg boss tamil Season 7
Bigg boss tamil Season 7

பிக்பாஸ் சீசன் 7 கடைசி வாரத்தை எட்டிய நிலையில் கலகலப்புக்காக பிக்பாஸ் வைத்த டாஸ்க்கால் வீட்டில் சண்டை அதிகரித்துள்ளது.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். விதிப்படி பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்க வேண்டும். பிக்பாஸ் கடந்த ஆறு சீசன்களுமே மிக விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்ததால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே இந்நிகழ்ச்சி உருவாக்கிக்கொண்டது.

பிக்பாஸின் 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசன் விறுவிறுப்பாக 98 நாட்களை கடந்து ஓடி கொண்டிருக்கும் நிலையில், ஆட்டம் சூடு பிடிக்கிறது. இன்னும் பைனல்ஸ்க்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். கடந்த வாரம் நடுவில் பூர்ணிமா ரூ 16 லட்சத்துடன் பணப்பெட்டியை எடுத்து சென்ற நிலையில் நேற்று வார இறுதியில் விசித்ரா வெளியேறினார்.

தொடர்ந்து திங்கட்கிழமையான இன்றைய எபிசோட் புரோமோக்கள் வியாகியுள்ளது. அதில் போட்டியாளர் மற்ற போட்டியாளரை விட எந்த வகையில் சிறந்து விளையாடுகிறார் என்று கூற வேண்டும் என டாஸ்க் வைக்கப்பட்டது. அப்போது பேசிய அர்ச்சனா தினேசை பற்றி கூறும் போது இருவரிடையும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கடுப்பான அர்ச்சனா யாரும் பேசக்கூடாது என கூறினார்.

ஆனாலும் மற்ற போட்டியாளர்கள் தங்களது கருத்துக்களை கூற உச்சக்கட்டமாக டென்ஷன் ஆன அர்ச்சனா நான் இந்த டாஸ்க்கை செய்யமாட்டேன் என கூறி செல்கிறார். இதனை பார்த்த மக்கள் ஒரு வாரம் மட்டுமே இருக்க நிலையில், சண்டையை வளர்த்து ஓட்டுக்களை இழக்க போகிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com