பிக்பாஸ் பணபெட்டி வாரம்.. போட்டியாளர்களுக்கு வந்த ட்விஸ்ட்!

Bigg Boss
Bigg Boss
Updated on

பிக்பாஸில் நடைபெற்று வரும் பணப்பெட்டி வாரத்தில் புதிதாக ஒரு ட்விஸ்ட் வைக்கப்பட்டுள்ளது.

விஜய் டி.வி.யில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி 91 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த சீசன் இறுதிகட்டதை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் இன்னும் வீட்டில் 8 போட்டியாளர்கள் உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
பிக்பாஸில் இருந்து வெளியேறிய நிக்சன் போட்ட முதல் போஸ்ட்.. என்ன தெரியுமா?
Bigg Boss

கடந்த வார இறுதியில் 2 பேர் எலிமினேட் செய்யபப்ட்ட நிலையில், இந்த வாரமும் 2 எலிமினேஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் நிக்சன், ரவீனா வெளியே சென்ற நிலையில், தற்போது மாயா, பூர்ணிமா, விஜய், அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ், மணி, விசித்ரா ஆகியோர் போட்டி போட்டு வருகின்றனர். விஷ்ணு டிக்கெட் டூ ஃபைனல்ஸ் வெற்றி பெற்றதால் மீதமுள்ள 7 பேரும் இந்த வார நாமினேஷில் உள்ளனர்.

யார் வெற்றி பெறுவார்கள் என ஆவலோடு ஓடி கொண்டிருக்கும் பிக்பாஸில் இந்த வாரம் பணப்பட்டி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான புரோமோக்களில், 1 லட்ச ரூபாய் முதல் பணம் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று போட்டியாளர்களுக்கு புதிய ட்விஸ்ட் வைக்கப்பட்டுள்ளது. அதாவது பணம் உயர்ந்து கொண்டே தான் போகும் என்பது வழக்கம். இந்த முறை பணம் குறையும் என பிக்பாஸ் புதிதாக ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளது. இதை யார் எடுத்து செல்வார்கள் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com