பிக்பாஸ் ஹவுஸின் போட்டியாளர்களுக்கு நடுவர்களாகும் ஸ்மால்பாஸ் ஹவுஸ்!

Bigg Boss Tamil Season 7
Bigg Boss Tamil Season 7

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் Talent show போட்டியில் ஸ்மால்பாஸ் போட்டியாளர்கள் நடுவர்களாக இருக்கவேண்டும் என்பது பிக்பாஸ் விதிமுறை.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்7 ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். விதிப்படி பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்க வேண்டும். பிக்பாஸ் கடந்த ஆறு சீசன்களுமே மிக விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்ததால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே இந்நிகழ்ச்சி உருவாக்கிக்கொண்டது.

இதையடுத்து பிக்பாஸ் 7 எப்போது வரும் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. அதைவிட யார் போட்டியாளர்களாக இருப்பார்கள் என பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது.

இதையடுத்து அக்டோபர் 1ம் தேதி பிக்பாஸ் சீசன் 7 தொடங்கியது. இந்த சீசனில் புது விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அதாவது பிக்பாஸ் வீடு ஸ்மால் பாஸ் வீடு என இரு வீடுகளாகப் பிரித்தனர். பிக்பாஸ் வீட்டில் சரியாக விளையாடாத ஆறு போட்டியாளர்களை கேப்டனால் தேர்ந்தெடுத்து ஸ்மால்பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

ஸ்மால்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் வீட்டின் அனைத்து வேலைகளையுமே செய்ய வேண்டும். மேலும் எந்த போட்டிகளிலுமே விளையாடக் கூடாது. பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் ஸ்மால்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என்பது விதிமுறை.

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 31வது நாளுக்கான ப்ரோமோ வெளியானது. இதில் அடுத்தகட்ட போட்டியாக பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு Talent show நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் போட்டியாளர்கள் தங்களின் தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். Talent show போட்டியில் தனிநபராகவோ, இரண்டு பேர் இணைந்தோ அல்லது ஒரு குழுவாகவோ சேர்ந்து கலந்துகொள்ளலாம்.

இப்போட்டியின் நடுவர்களாக ஸ்மால் பாஸ் வீட்டாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். வைல்டு கார்டு போட்டியாளர்களை முதல் வாரமே ஸ்மால்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்து ஏற்கனவே பிக்பாஸ் போட்டியாளர்கள் வெறுப்பைத் தேடிக்கொண்டார்கள். இந்நிலையில் அவர்கள் என்ன தீர்ப்பு பிக்பாஸ் போட்டியாளர்களுக்குச் சொல்லப்போகிறார்கள் என்பது மிகவும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

மேலும் நேற்று நடந்த பெரிய வாக்குவாதத்திற்குப் பிறகு இன்று பிரதீப்பும் கூல் சுரேஷும் பேசிக்கொள்கிறார்கள். பிரதீப் உரிமையுடன் தான் சுரேஷிடம் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன் என்று கூறுகிறார். ஆனாலும் கூல் சுரேஷ் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இருவரும் தனியாகப் பிரச்சனைக்கான மூலக்காரணங்களைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் அதனால் இன்னும் தான் மனஸ்தாபங்கள் கூடுகிறது. இருவருக்குள்ளும் பிரச்சனை தீர்ந்ததா? இல்லை மேலும் வலுக்கிறதா? என்பது இன்றைய எப்பிசோடில்தான் தெரிய வரும்.

அதேபோல், நிக்சன், ஐஷு இருவரும் காதலிக்கிறார்களா என மாயா கேட்கிறார். அதற்கு ஐஷு என்ன பதில் சொல்கிறார் என ஆடல், பாடல், சண்டை மற்றும் காதல் என இன்றைய பிக் பாக்ஸ் ப்ரமோ உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com