பிக்பாஸில் ஒலித்த கணீர் குரலுக்கு சொந்தமானவர் யார் தெரியுமா?

பிக்பாஸ்
பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ஒளிப்பரப்பட்டு வருகிறது. தமிழில் இதுவரை 6 சீசன் ஒளிபரப்பட்ட நிலையில், தற்போது 7வது சீசனும் நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனில் எத்தனையோ போட்டியாளர்கள், தொகுப்பாளர்கள் வந்தாலும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு குரல் தான் பிக்பாஸ் குரல்.

வெறும் பிக்பாஸ் என்ற பெயரில் ஒலிக்கும் குரலை கேட்டு மட்டுமே 100 நாட்கள் போட்டியாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அனைவரையும் அனுசரித்து பக்குவமாக பேசும் குரல் அனைவரின் நெஞ்சிலும் பதிந்துள்ளது. அப்படி தான் தமிழில் 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில், 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து கடந்த 2 நாட்கள் முன்பாக நடைபெற்ற பைன்ல்ஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.50 லட்சம், வீடு, கார் என அனைத்தும் பரிசாக வழங்கப்பட்டது.

பிக்பாஸ் குரல்
பிக்பாஸ் குரல்

எந்த சீசனிலும் இல்லாத அளவாக இந்த சீசனில் பிக்பாஸ் முதல்முறையாக பாடல் பாடினார். தென்றல் வந்து தீண்டும் போது என்று அவர் பாடிய பாடல் இணையத்தில் வைரலானது. அப்படி அனைவரும் கேட்கும் இந்த குரல் யாருடையது என பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது அவருடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழில் முதல் சீசனில் இருந்து குரல் கொடுத்து வருபரின் பெயர் சதியிஷ் சாரதி சஷோ  என தகவல் வெளியாகி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com