"தென்றல் வந்து தீண்டும் போது" முதல் முறையாக பாட்டு பாடிய பிக்பாஸ்!

bigg boss 7
bigg boss 7
Updated on

பிக்பாஸ் சீசனுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். பிக்பாஸ் போட்டியாளர்கள், விளையாட்டுக்களுக்கு எப்படி ரசிகர்கள் உள்ளார்களோ, அப்படி தான் பிக்பாஸ் குரலுக்கும் ரசிகர்கள் உள்ளனர்.

பிக்பாஸின் தனித்துவமான குரலை கேட்டு பலரும் ரசிப்பார்கள். முகம் தெரியாத அந்த குரலுக்கு சொந்தக்காரர் தான் ஒவ்வொரு போட்டியாளரும் துவண்டு போகும் போது புத்துணர்வு அளிக்கும். இந்த குரலுக்கு சொந்தக்காரருக்கு பிக்பாஸ் 3வது சீசனில் சாண்டி, கவின் என அந்த போட்டியாளர்கள் குருநாதா என பெயர் வைத்தனர்.

இதன் மூலம் பிக்பாஸ் குருநாதர் என பிரபலமானார். அந்த வகையில் தற்போது 7வது சீசனிலும் தனது தனித்துவமான குரலில் அனைவரையும் அதிசயக்க வைத்துள்ளார். வெறும் குரலால் கருத்துக்கள், கமெண்டுகள் மட்டும் கூறும் பிக்பாஸ் முதல்முறையாக பாடல் பாடியுள்ளார். இதுவரை இல்லாததாக இந்த சீசனில் அனைத்து போட்டியாளர்களும் பைனல்ஸையொட்டி மீண்டும் உள்ளே வந்துள்ளனர். அப்போது அனைவரையும் குதூகலப்படுத்த பிக்பாஸ் பாட்டு கச்சேரி நடத்தியது.

இதில் அனைவரும் பாட்டு பாடி, நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் பிக்பாஸ் தனது குரலால் பாட்டு பாடி அனைவரையும் அதிசயக்க வைத்துள்ளார். தென்றல் வந்து தீண்டும் போது என்ற பாடலை அழகாக பாடி அசத்தியுள்ளார் பிக்பாஸ். இதனை கேட்ட போட்டியாளர்கள் மகிழ்ச்சியாக துள்ளி குதித்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com