நிக்ஸன் கேப்டன்சியில் சர்வாதிகார ஆட்சி.. கதிகலங்கும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் புரோமோ
பிக்பாஸ் புரோமோ

விஜய் டிவியின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத ஒன்றாக பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என்ற கான்செப்ட் இந்த சீசனில் கொண்டுவரப்பட்டது. இது புதுவிதமாக இருந்தாலும் மக்கள் இதற்கு பெரும் வரவேற்பை அளித்தனர். கேப்டனுக்கு பிடிக்காத நபராக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இந்த ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள்.

அப்படி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சீசன் வெற்றிகரமாக 50 நாளை கடந்தது. இதில் சில வாரங்களுக்கு முன்பு பெண்கள் பாதுகாப்பு என்ற பெயரில் பிரதீப் ஆண்டனி அனைவராலும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, அனைத்திலும் பிரதீப் ஆண்டனி ட்ரெண்டிங் ஆனார். இந்த நிலையில் ஏற்கனவே வைல்டு கார்ட் எண்ட்ரி முடிந்த நிலையில், எந்த சீசனிலும் இல்லாத ஒன்றாக வெளியேற்றப்பட்ட நபர்கள் மீண்டும் உள்ளே வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

அதுவும் விளையாட்டில் தோற்றால் மட்டுமே என்றும் சொல்லப்பட்டது. 3 டாஸ்குகள் வைக்கப்பட்டதில், 2 டாஸ்குகளில் ஹவுஸ்மேட்ஸ் தோற்றுவிட்டனர். இதனால் வெளியே சென்ற விஜய் வர்மா மற்றும் அனன்யா ராவ் வீட்டிற்குள் சென்றனர். இவர்களின் எண்ட்ரிக்காக இந்த வாரம் அக்‌ஷயாவும், ஆர் ஜே பிரவோவும் எலிமினேட் செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வார கேப்டனாக நிக்ஸன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரது கேப்டன்சியை உடைக்கும் விதமாக பலரும் சதிதிட்டம் தீட்டி வருகின்றனர். இந்த நிலையில் இன்று அடுத்தடுத்து வெளியான புரோமோக்களில் அரண்மனையாக பிக்பாஸ் வீடு மாறுகிறது. மன்னராக இருக்கும் நிக்ஸன் அனைவரையும் வெளுத்து வாங்குகிறார். எதிர்த்து கேட்பவர்களிடம் இது சர்வாதிகார ஆட்சி என கர்ஜிக்கிறார். இனி என்ன நடக்கும் என்பதை அடுத்தடுத்த எபிசோட்களிலேயே பார்க்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com