விரக்தியில் மாயா போட்ட பதிவு.. இணையத்தில் வைரல்!

மாயா
மாயா

பிக்பாஸ் மாயா வெளியேவந்த பிறகு முதல்முறையாக தனது இன்ஸ்டாகிராமில் விரக்தியுடன் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது. இதுவரை 6 சீசன்கள் முடிந்த நிலையில் 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் வாரத்தில் இருந்தே சர்ச்சையில் சிக்கியவர் மாயா. கடைசி நிமிடம் வரை சென்ற அவர், 2வது ரன்னராக அறிவிக்கப்பட்டார். அர்ச்சனா, மணி, மாயா ஆகிய மூவரும் டாப் 3 போட்டியாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், பரபரப்பாக மேடையில் இருந்து மாயா வெளியேறினார்.

தொடர்ந்து டைட்டில் வின்னராக அர்ச்சனாவும், ரன்னராக மணியும் அறிவிக்கப்பட்டார். வின்னராக அறிவிக்கப்பட்ட அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்சம், ஒரு கார், ஒரு வீடு என அனைத்தும் பரிசாக வழங்கப்பட்டது. அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் அதிகமான நிலையில் அவர் வோட்டிங் அடிப்படையில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் புல்லி கேங் என்று சொல்லப்படும் மாயா கேங் அர்ச்சனா வின்னரானதில் கடுப்பாகினர். தொடர்ந்து வெளியேறிய மாயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த விரக்தியை பதிவிட்டுள்ளார். அதில், “கையில் என்ன கொண்டு வந்தோம், கொண்டு செல்ல” என தோழிகளுடன் இருக்க புகைப்படத்தை பகிர்ந்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com