ரூ.16 லட்சத்துடன் வெளியேறிய பூர்ணிமாவின் தரமான சம்பவம்!

Biggboss Poornmaravi
Biggboss Poornmaravi

பிக்பாஸில் இருந்து பணப்பெட்டியுடன் வெளியே சென்ற பூர்ணிமாவை அவரது குடும்பத்தினர் பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

பிக்பாஸ் 7வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் 90 நாட்களை கடந்து ஓடி கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடைபெற்றது. விரைவில் இந்த சீசன் முடிவடையவுள்ள நிலையில், இந்த வாரம் பணப்பெட்டி வைக்கப்பட்டது. ரூ.1 லட்சம் முதல் தொடங்கிய இந்த பணப்பெட்டியை யார் எடுப்பார் என எதிர்ப்பார்ப்புகள் எகிறி வந்தது.தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்ற பணம் கடைசியாக ரூ.16 லட்சத்திற்கு சென்றது.

உடனே பெட்டியை எடுக்கலாம் என முடிவெடுத்த பூர்ணிமா அதனை தான் எடுப்பதாக அறிவித்தார். தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். பிறகு பெட்டியுடன் குத்தாட்டம் போட்ட படி வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய பூர்ணிமாவை அவரது குடும்பத்தினர் பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கேக் வெட்டிய பூர்ணிமா உற்சாகமாக குத்தாட்டம் போட்ட படி வீட்டிற்கு சென்றார்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக தொடர்ந்து மாலை நேரத்தில் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். 90 நாட்கள் வீட்டிற்குள் இருந்த பூர்ணிமாவுக்கு விஜயகாந்த் மறைவு குறித்து தெரிந்திருக்காது. தற்போது வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் விஜயகாந்தின் சமாதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த புகைப்படமும், வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com