மலை கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த காமெடி நடிகர் பாலா !

Bala
BalaIntel
Published on

ரோடு மாவட்டம் குன்றி மலை பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தார் நடிகர் பாலா.

பிரபல தனியார் தொலைகாட்சியில் நடைபெறும் காமெடி நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி இன்று தமிழ்நாட்டின் பேசப்படும் காமெடி நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கிறார் சின்னத்திரை நட்சத்திரம் பாலா. மேலும் தற்போது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் பாலா ஈரோடு மாவட்டம் குன்றி மலை கிராமத்திற்கு  10 லட்சம் ரூபாய் செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.  மேலும் இதற்கு உணர்வு ஆம்புலன்ஸ் என்று பெயரிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி ஜவகர், மேயர் நாகரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாலா கூறியது, 2020- 21 கொரோனா காலகட்டத்தில் மக்கள் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் சிரமப்பட்டதை கண்கூடாக பார்த்தேன். ஆனால் அன்று வாங்கி தர என்னிடம் பணம் இல்லை. இன்று நான் சம்பாதிக்க தொடங்கிய பிறகு அதை நிறைவேற்றி வருகிறேன். அறந்தாங்கி முதியோர் இல்லத்திற்கு என் பிறந்தநாள் அன்று ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தேன். அதைத்தொடர்ந்து ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலமாக ஈரோடு மாவட்டம் குன்றி மலை பகுதி பற்றி தெரிய வந்தது.

அந்த பகுதி மக்கள் பிரசவம் மற்றும் அவசர தேவை, விலங்குகளால் தாக்கப்படும் பொழுது ஆம்புலன்ஸ் கிடைக்காமல் சிரமப்பட்டு வருவதை அறிந்தேன். அப்போது அந்தப் பகுதிக்கு ஆம்புலன்ஸ் வாங்கி தர வேண்டும் என்று முடிவு செய்தேன். மேலும் நான் செய்யும் உதவிக்கு யாரிடமும் காசு கேட்கக்கூடாது என்பது என்னுடைய நோக்கம்.

அதனால் ஒன்றரை மாத காலமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து கலந்து கொண்டேன். 15 நாட்கள் ஓய்வில்லாமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு 10 லட்சம் ரூபாய் பணத்தை சேமித்து, தற்போது மொபைல் ஐ சி யு வசதிகளை கொண்ட ஆம்புலன்ஸை வாங்கி கொடுத்துள்ளேன். 

என்னைத் தாண்டி எவ்வளவோ பேர் பெரிய பெரிய உதவிகளை செய்யறாங்க. ஆனாலும் என்னைப் பொருத்த வரை இதைப் பெரிய விஷயமாத்தான் நினைக்கிறேன். ஏன்னா எங்கப்பா இப்பவும் பெட்ரோல் பங்குலதான் வேலை செய்றார் என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com