குக்வித் கோமாளி ஷோவில் இருந்து விலகும் நடுவர்... அவரே போட்ட போஸ்டால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Venkatesh Bhat
Venkatesh Bhat
Published on

குக்வித் கோமாளியில் இருந்து விலகுவதாக நடுவர் ஒருவர் போட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பட்டிதொட்டி எல்லாம் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இதுவரை 4 சீசன்கள் கடந்த நிலையில் அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். இந்த சீசனில் பங்கேற்ற குக்குகளை விட கோமாளிகளே அதிக வாய்ப்பை பெற்று தற்போத் சினிமாவில் வளர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். முழுக்க முழுக்க அதற்கு இந்த குக்வித் கோமாளி நிகழ்ச்சியே காரணமாகும்.

இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்றவர்கள் தான் செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் பட். இருவரும் குக்கோடும், கோமாளிகளோடும் சரிசமமாக இறங்கி ஃபன் செய்வது மக்களை ரசிக்க செய்தது. அதிலும் குறிப்பாக செஃப் வெங்கடேஷ் பட்டுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு என்று சொல்லலாம். அவர் ஒரு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றாலே பலரும் மெசேஜ் அனுப்புவதாகவும், அடுத்த வாரம் இதனால் தான் வரவில்லை என அவர் நிகழ்ச்சியிலேயே மன்னிப்பு கேட்பார். அப்படி ரசிகர்களின் ஃபேவரைட் ஆன இவர், அடுத்த சீசனில் பங்கேற்கமாட்டேன் என அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Venkatesh Bhat
Venkatesh Bhat
இதையும் படியுங்கள்:
சீரியல் நடிகரை 2வது திருமணம் செய்த நடிகை நிவேதிதா... வைரலாகும் போட்டோஸ்!
Venkatesh Bhat

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில மாதங்களாக பல்வேறு சமூக ஊடக தளங்களில், குக்வித் கோமாளி சீசன் 5 புதிய சீசன் தொடங்கும் என்றும், இந்த நிகழ்ச்சியில் நான் நடுவராக இருப்பேன் என செய்திகள் பரவி வருகின்றன. மில்லியன் கணக்கான மக்களை மகிழ்ச்சியடையச் செய்த இந்த அற்புதமான நிகழ்ச்சியிலிருந்து நான் ஓய்வு எடுக்க போகிறேன். இந்த அற்புதமான நிகழ்ச்சியை உருவாக்கி செயல்படுத்திய எனது இயக்குனர் மற்றும் நிகழ்ச்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும் இந்த நிகழ்ச்சி பலரது மன அழுத்தத்தை குறைக்க கூடிய ஒரு நிகழ்ச்சியாக இருந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருந்து நான் விலகுவது, ஒரு கடினமான முடிவு தான். நான் அதில் உறுதியாக நிற்கிறேன். குக்வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com