ரசிகர்கள் எதிர்பார்த்த குக்வித் கோமாளி 5.. போட்டியாளர்கள் லிஸ்ட் இதுதான்!

cook with komali
cook with komali

குக்வித் கோமாளி அடுத்த சீசன் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கும் உலகம் முழுவதும் ஆதரவு உள்ளது. குக்கிங் ஷோவை அழகாக எடுத்து செல்லும் இந்த நிகழ்ச்சியின் கோமாளிகளுக்கு அதிக ரசிகர்கள் உண்டு.

இந்த மூலம் தான் நிறைய கோமாளிகளுக்கு பல வாய்ப்புகள் வீடு தேடி வந்தது. அந்த அளவிற்கு ரசிகர்கள் ஆதரவு இந்த நிகழ்ச்சிக்கு உள்ளது. இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் குக்வித் கோமாளியின் 5வது சீசன் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

ஒரு பக்கம் குக் வித் கோமாளி சீசன் 5 இல்லை என்று கூறினாலும், சமீபகாலமாக வெளிவரும் தகவல்களில் குக் வித் கோமாளி சீசன் 5 விரைவில் துவங்கவுள்ளது என கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை துவங்குவது தான் விஜய் டிவியின் வழக்கம். ஆகவே விரைவில் குக் வித் கோமாளி ஆரம்பமாக இருக்கிறது என்கின்றனர். வழக்கம் போல் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு நடுவர்களாக இருக்க விஜே ரக்ஷன் மற்றும் மணிமேகலை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார்கள். அதே போல் சில கோமாளிகள் சீசன் 5ல் தொடருவார்கள் என்றும், சில புதிய கோமாளியின் வரவு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், குக் வித் கோமாளி சீசன் 5ன் போட்டியாளர்கள் லிஸ்ட் தற்போது லீக்காகியுள்ளது. டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தீபா வெங்கட், நடிகை வடிவுக்கரசி, தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா, நடிகை மாளவிகா மேனன், பிக் பாஸ் 7 நடிகர் விஷ்ணு, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமா, நடன இயக்குனர் ஸ்ரீதர் மகள் அக்ஷதா ஆகியோர் தான் போட்டியாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com