சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் 2 சீரியலில், விசாலாட்சி ஈஸ்வரியை சரமாரியாக கேள்விகள் கேட்டு திட்டுகிறார். இதனால் ஈஸ்வரி மயக்கம் போட்டு விழுகிறார்.
எதிர்நீச்சல் 1 சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தினால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சீரியலை விரும்பிப் பார்த்தார்கள். அதில் ‘ஏமா ஏய்’ என்ற வசனம் சமூக வலைதளங்கள் எங்கும் இருந்தன. அதுமட்டுமின்றி குணசேகரனின் ஒவ்வொரு வசனங்களும் பிரபலமாகின. 6 மாதங்கள் கழித்து மீண்டும் சீரியலின் 2ம் பாகம் தொடங்கியது.
இதுவும் முதல் பாகம் போலவே விறுவிறுப்பாகதான் செல்கிறது.
வெகுநாட்களாக தர்ஷன் குறித்த கதைக்களம்தான் நகர்ந்து வருகிறது. முதலில் தர்ஷன் ஒரு பெண்ணை காதலித்தான். பின் குணசேகரன் தர்ஷனுக்கு பெரிய வீட்டில் பெண் பார்க்கிறார். தர்ஷனும் அதற்கு ஒப்புக்கொள்கிறார்.
பின்னர் ஈஸ்வரி மற்றும் அந்த வீட்டு மருமகள்கள் தர்ஷனுக்கு சில விஷயங்களை புரிய வைக்கிறார்கள். உண்மையை புரிந்துக்கொண்ட தர்ஷன் யாருக்கும் தெரியாமல் எங்கேயோ போய்விடுகிறார்.
இதற்கு காரணம் ஈஸ்வரிதான் என்றும், நிச்சயம் தர்ஷனை ஜீவானந்தத்திடம்தான் அனுப்பி வைத்திருப்பார்கள் என்றும் குணசேகரன் அவரது தம்பிகளை தூண்டிவிடுகிறார். இதனையடுத்து சக்தியை கொடைக்கானலுக்கு அனுப்பி, தர்ஷனுடன் சேர்த்து ஜீவானந்தத்தையும் பிடிக்க குணசேகரன் திட்டம் போடுகிறார்.
மறுபக்கம் அறிவுகரசி குடும்பமும் தர்ஷனை தேடிக்கொண்டிருக்கிறது. மேலும் குணசேகரன் விசாலாட்சியை தூண்டிவிட, விசாலாட்சி ஈஸ்வரியை வாய்க்கு வந்தப்படி பேசுகிறார்.
ஈஸ்வரியிடம் ஆறு மாத காலம் நீ ஜீவானந்தத்துடன் இருந்தாய் அதனால் நாங்கள் உனக்கு பெரிதாக தெரியவில்லை. “விட்ட குறையோ தொட்ட குறையோ” என வித்தியாசமான வார்த்தைகளை பயன்படுத்தி ஈஸ்வரியில் நடத்தைகளை பற்றி அவதூறாக பேசியுள்ளார் விசாலாட்சி. இதை நினைத்து நினைத்து சுய நினைவை இழந்து மயக்கம்போடுகிறார் ஈஸ்வரி.
இதனையடுத்து ஈஸ்வரி மீனாட்சி அம்மன் மீது சத்தியம் செய்கிறார். எப்போது ஜீவானந்தம் வருவார் என்றுதான் இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.