நடிகை ஜான்சி ராணி!
நடிகை ஜான்சி ராணி!

பிரபல சீரியலில் இருந்து விலகிய எதிர்நீச்சல் ஜான்சி ராணி!

Published on

எதிர்நீச்சல் ஜான்சி ராணி பிரபல சீரியலில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் டிவியில் பலரது மனதையும் கவர்ந்து வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு தங்கையாக ஜான்சி ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார் காயத்ரி கிருஷ்ணன். இவர் ஏற்கனவே அயலி வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு திருச்செல்வம் மீண்டும் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் நடிகை ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கனிகா, மாரிமுத்து, கமலேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.இதில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி நடிகை மதுமிதா நடித்து வருகிறார்.

பெண்களை அடிமையாக நடத்தும் மனநிலைக்கு எதிராக எதிர்நீச்சல் சீரியலின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டின் மருமகள்கள் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி நால்வரும் அப்பத்தாவின் உதவியோடு சுயமரியாதையுடன் பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக செயல்படுகின்றனர்.வாயில் எப்போது வெற்றிலையை போட்டுக்கொண்டு கொடுமையான வில்லியாக அந்த சீரியலில் அவரது நடிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

விஜய் தொலைக்காட்சியுல் புதிதாக தொடங்க இருக்கும் கிழக்குவாசல் சீரியலில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருந்தார். இந்நிலையில் தற்போது கிழக்குவாசல் சீரியலில் இருந்து அவர் வெளியேறுவதாக தகவல் வந்திருக்கிறது. கால்சீட் பிரச்னை காரணமாக அவர் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com