முடிவுக்கு வரும் எதிர்நீச்சல் சீரியல்... ரசிகர்கள் அதிர்ச்சி!

Ethirneechal serial
Ethirneechal serial

சன் டிவியில் முன்னணி சீரியலாக ஓடி கொண்டிருந்த எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வரவுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சன் டிவியில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட சீரியல் தான் எதிர்நீச்சல். கோலங்கள் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் சீரியலை இயக்கிய திருச்செல்வம் தான் இந்த சீரியலை இயக்கி வந்தார். குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்த இந்த சீரியல் படிப்படியாக டிஆர்பி-யிலும் முன்னேறி டாப்புக்கு வந்தது. பின்னர் போகப்போக கதைக்களம் விறுவிறுப்பானதால் சோசியல் மீடியாவில் இந்த சீரியல் பற்றி பேச்சுகள் அடிபட தொடங்கின.

இதற்கு முக்கிய காரணம் நடிகர் மாரிமுத்து தான். இயற்கையாகவே அவர் நடிப்பு பலரையும் ஈர்த்தது. "எம்மா ஏய்" என்ற வசனம் பட்டி தொட்டி எல்லாம் பரவி சீரியலிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி நன்றாக சென்றுகொண்டிருந்த சீரியலுக்கு கடந்த ஆண்டு பேரிடியாய் வந்தது தான் மாரிமுத்துவின் மறைவுச் செய்தி. அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது மருத்துவமனையில் காரை விட்டு இறங்கியதுமே மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார் மாரிமுத்து.

இவரின் மறைவுக்கு பிறகு சீரியல் முடிவுக்கு வரும் என்று சொல்லப்பட்ட நிலையில், இவருக்கு பதிலாக வேல ராமமூர்த்தி இந்த இடத்தை நிரப்பினார். அவர் திறமையான நடிகராக இருந்தாலும் மாரிமுத்து அளவுக்கு அவரது நடிப்பு இல்லை என்பது தான் பலரது கருத்தாகவும் இருந்தது.

இதையும் படியுங்கள்:
இசை(விஞ்)ஞானிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
Ethirneechal serial
Ethirneechal serial
Ethirneechal serial

பின்னர் போகப் போக கதையும் சொதப்பியதால் டிஆர்பி-யில் சரிவை சந்தித்த எதிர்நீச்சல் சீரியலை தற்போது வேறு வழியின்றி முடிவுக்கு கொண்டுவந்துள்ளார் இயக்குனர் திருச்செல்வம். அந்த சீரியலின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் அண்மையில் நிறைவடைந்து இருக்கிறது. அப்போது கடைசி நாள் படப்பிடிப்பின் போது சீரியல் குழுவினர் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com