இவருக்கு பதில் இவர்.. ரசிகர்கள் ஏற்று கொண்டார்களா?

marimuthu
marimuthu
Updated on

திர்நீச்சல் சீரியலின் அடுத்த ஆதி குணசேகரனான வேல ராமமூர்த்தி மாஸ் எண்ட்ரி கொடுத்து தம்பிகளை காப்பாற்றினார்.

எதிர்நீச்சல் சீரியல் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. கடந்த மாதம் 8ஆம் தேதி மாரடைப்பால் டப்பிங் பணியின் போது பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்காகவே எதிர்நீச்சல் சீரியல் பார்த்தவர்கள் பலர். அப்படி யாரும் நிரப்ப முடியாத அளவிற்கு நடிகர் மாரிமுத்து நடிப்பில் மிரட்டி எடுத்துள்ளார்.

இவரின் நடிப்பை பார்த்து வியந்த இயக்குனர்கள் பல படங்களில் வாய்ப்பளித்தனர். ஏற்கனவே பல படங்களில் நடித்திருந்தாலும், எதிர்நீச்சல் சீரியல் மூலம் அவர் அடைந்த உயரம் உச்சக்கட்டமாகும். தற்போது அவர் உயிரிழந்துள்ளதால் அவரின் கதாபாத்திரத்தில் இனி யார் நடிக்கப்போவது என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் பலர் நடிகர் வேல ராமமூர்த்தி தான் கரெக்டாக இருப்பார் என்றும் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும், நடிகர் பசுபதி போன்றோர் பெயரும் அடிபட்டது. இந்த நிலையில், எதிர்நீச்சல் குழுவினர் அந்த சஸ்பென்ஸை தற்போது உடைத்துள்ளனர். ஆம், வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்பட்ட ஆதி குணசேகரன் மீண்டும் வந்துள்ளார்.

வேலராமமூர்த்தியையே ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்திற்கு போட்டுள்ளனர். நேற்றைய எபிசோட் முதல் இவர் எண்ட்ரி கொடுத்துள்ளார். காரில் மாஸாக எண்ட்ரி கொடுத்த ஆதிகுணசேகரன் வேட்டியை மடித்து கட்டி தம்பிகளை காப்பாற்றினார். பின்பு தம்பிகளை கட்டியணைத்து அண்ணன் வந்துவிட்டதாக கூறினார்.

இதனை பார்த்த ரசிகர்கள், மாரிமுத்துவிற்கு பதில் வேலராமமூர்த்தியை ஏற்றுகொள்ளாமுடியாவிட்டாலும் நன்றாக நடிக்கிறார் என கருத்து தெரிவித்து வருகின்றனர். வரும் எபிசோட்களிலேயே அவர் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தை நிறைவு செய்து ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்வாரா என தெரியவரும்.

logo
Kalki Online
kalkionline.com