Baakiyalakshmi
Baakiyalakshmi

பாக்கியாவிடம் இறுதிச் சடங்கை செய்ய சொல்லும் ஈஸ்வரி.... ஷாக்கான கோபி!

Published on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில், பாக்கியாவின் மாமனாரும் மற்றும் கோபியின் தந்தையுமான ராமமூர்த்தி இறந்த செய்தியைக் கேட்டு கோபி அதிர்ச்சியில் திகைக்கிறார்.

விஜய் டிவியில் ரசிகர்களை அதிகம் ஈர்க்கும் ஒரு சீரியல் பாக்கியலட்சுமி. ஒரு குடும்ப பெண் தன் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறி வருகிறார் என்பதும், குடும்பத்தையும் வேலையையும் சரி சமமாக எப்படி பார்த்து வருகிறார் என்பதும் முக்கிய கதையாக அமைந்திருக்கிறது. கிளை கதைகளும், சமுகம் புரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்களும் ஏராளம். அந்தவகையில் இந்த சீரியல் 1000 எபிசோட்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது.

அந்தவகையில் பாக்கியலட்சுமி சீரியல் ஒரு முக்கிய கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஆம்! பாக்கியாவிற்கும், பாக்கியாவின் முடிவுகளுக்கும் எப்போதும் துணையாக இருக்கும் பாக்கியாவின் மாமனார் ராமமூர்த்தி உயிரிழந்தது போல் கதை நகர்கிறது.

தனது 80வது வயது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய அவர், அடுத்த நாள் காலையில் எழவே இல்லை. அப்படியே உயிர் பிரிந்ததுபோல் காட்சி படுத்தப்பட்டிருக்கிறது. இறுதியாக பாக்கியாவிடம் மனம் விட்டு கண்கலங்கி பேசினார் ராமமூர்த்தி.  

இதனையடுத்து மருத்துவரும் ராமமூர்த்தி இறந்துவிட்டதாக உறுதி செய்தார். இது அறிந்த கோபி, அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. நேற்று கொண்டாட்டத்தால் சோர்வாக இருந்திருப்பார், தண்ணீர் அடித்தால் சரியாகிவிடும் என தந்தையின் அருகில் செல்கிறார். பின் அவரது கையை பிடிக்கும் போது அப்பா இறந்தது கோபிக்கு தெரிய வர அதிர்ச்சியாகிறார்.

இதையும் படியுங்கள்:
ANGRY YOUNG MEN: Season 1 - "நான் சாட்சிக் கையெழுத்து போட்டால் அந்தத் திருமணம் நிலைக்காது என் ராசி அப்படி"
Baakiyalakshmi

இதனையடுத்து கோபியின் அம்மா ஈஸ்வரி, கோபியை அருகில் செல்லக்கூடாது என்றும், அவர் இறந்ததற்கு நீதான் காரணம் என்றும் கூறிவிடுகிறார். ராமமூர்த்தி 'இறுதியாக அனைவரும் நல்லபடியாக இருக்கின்றனர். கோபி மட்டும்தான் வெளியே சென்றுவிட்டான். நம்முடன் இருக்கும்போது எவ்வளவு நன்றாக இருந்தது' என்று கூறியதாக சொல்லி ஈஸ்வரி கோபியிடம் கூறுகிறார். இதனையடுத்து ராமமூர்த்திக்கு கோபி எந்த இறுதிச் சடங்கும் செய்யக்கூடாது என்றும், பாக்கியாதான் செய்ய வேண்டும் என்றும் ஈஸ்வரி கூறுகிறார். அதற்கு பாக்கியா, கோபியின் உரிமை அது அவரே செய்யட்டும் என்று சொல்கிறார். ஆனால், ஈஸ்வரி ஒத்துக்கொள்வதாக தெரியவில்லை.

யார் இறுதிச்சடங்கு செய்வார் என்பதை நோக்கி கதை பரபரப்பாக நகர்கிறது.

logo
Kalki Online
kalkionline.com