இனி சின்னத்திரையில் நடிக்கமாட்டேன் – காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை!

Priyanka Kumar in kaatrukenna veli
Priyanka Kumar
Published on

விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி கதாநாயகி பிரியங்கா குமார் இனி சின்னத்திரையில் நடிக்கப்போவதில்லை என்றும், வெள்ளித்திரையில் மட்டுமே நடிக்கப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

காற்றுக்கென்ன வேலி தொடர் ஒரு பெண்ணின் போராட்டத்தை குறித்துச் சொல்லும் சீரியலாக அமைந்தது. ஒரு பெண் வீட்டைவிட்டு வந்து கல்லுரியில் சேர்ந்து படித்து பல கஷ்டங்களை அனுபவிக்கும் கதைக்களத்தை கொண்டது. இந்த தொடரில் பிரியங்கா குமார் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் ஒரு Female centric கதை என்பதால், பரியங்காவிற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கதையாக இருந்தது. பலருக்கும் பிடித்தமான சீரியலாகவும் மாறியது.

இதனையடுத்து பிரியங்கா மீண்டும் எந்த ஒரு நாடகத்திலும் நடிக்கவில்லை. ஒப்பந்தமும் செய்யவில்லை. இதற்கு காரணம் இவர் தற்போது தொடர்ந்து படங்களில் கம்மிட்டாகி வருகிறார் என்பதால்தான்.

இவர் தெலுங்கு சினிமாவில் அதுரி லவ்வர் மற்றும் ருத்ர கருட புராணம் ஆகிய படங்களில் நாயகியாக நடித்து உள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதை தொடர்ந்து, கன்னடத்தில் தற்போது 3வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். மன்சோரே இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் புல்லாங்குழல் கலைஞராக பிரியங்கா நடிக்க உள்ளார்.

இந்தநிலையில் மீண்டும் சின்னத்திரையில் நடிக்கப்போவதில்லை என்றும், படத்தில் மட்டுமே நடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார். படவாய்ப்பு கிடைப்பதற்காகவே சீரியலில் நடித்ததாக கூறினார். தற்போது ஒப்பந்தமாகியுள்ள படத்திற்காக அவர் புல்லாங்குழல் வாசிக்க கற்றுக் கொண்டு வருவதாக, இந்த படத்தில் தனது முழு உழைப்பையும் கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
12 ஹீரோக்கள் நிராகரித்த படம்… 100 கோடி வசூல் செய்து சாதனை!
Priyanka Kumar in kaatrukenna veli

சீரியலில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகை நடிகர்கள் ஏராளம். கவின், ரியோ முதல் பிரியா பவானி சங்கர், வானி போஜன் வரை சொல்லிக்கொண்டே போகலாம். வட இந்தியா சீரியலில் நடித்து தற்போது பான் இந்தியா நடியாக மாறியவர் மிருணால் தாகூர், அந்தவகையில், தற்போது மீண்டும் ஒரு நாயகி சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வரை சென்று இரண்டு படங்களில் நடித்து முடித்து மூன்றாவது படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இவரும் கூடிய சீக்கிரம் அதிக படங்கள் நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com