‘ரெவனென்ட்’ கொரியன் ஹாரர் டிராமா பாக்கலைன்னா நஷ்டம் உங்களுக்குத்தான்!

If you haven't seen the Korean horror drama 'Revenant', you're loss out!
If you haven't seen the Korean horror drama 'Revenant', you're loss out!https://www.screenbinge.com

ரெவனென்ட் (Revenant) 2023ல் தென்கொரியாவில் வெளியான ஹாரர் தொலைக்காட்சி தொடராகும். ‘ரெவனென்ட்’ என்பதன் அர்த்தம், ‘இறந்த பிறகு திரும்புவது’ எனப் பொருளாகும்.

கிம் யூன் ஹி (Kim Eun Hee) இக்கதையை எழுதியுள்ளார். இவர் கிங்டம் (Kingdom) போன்ற வெற்றி பெற்ற தொடர்களின் கதைகளை எழுதியவர் ஆவார். இக்கதையில் கிம் தேரி (Kim Tae ri), ஓ ஜூங் சே (oh Jung se), ஹோங் க்யூங் (Hong Kyung) போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த டிராமா 23 ஜூன் முதல் 29 ஜூலை 2023 வரை ஒளிபரப்பானது. இந்த டிராமாவை டிஸ்னி பிளஸ்ஸில் காணலாம்.

ரெவனென்டில் மொத்தம் 12 எபிஸோடுகள் உள்ளன. இது ஒரு மிஸ்ட்ரி திரில்லர் ஹாரர் டிராமாவாகும். கு சான் யூங்தான் இக்கதையின் கதாநாயகி. அவள் பகலில் பார்ட் டைம்மாக வேலை பார்த்துக்கொண்டு, இரவில் அரசாங்க வேலைக்காக படிப்பது அவளின் வழக்கம். அவளுடைய அம்மாவுடன் தனியே வாழ்ந்து கொண்டிருப்பாள். மிகவும் ஏழ்மையான சூழ்நிலையிலேயே அவளின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும்.

ஒரு நாள் அவளின் அம்மாவிற்கு ஒரு போன் கால் வரும். அதைக் கேட்டதும் அவரின் முகம் மாறிவிடும். போனை வைத்து விட்டு கு சான் யூங்கை தன்னுடன் கிளம்பி வரச் சொல்வார். அவளுடைய அப்பாவின் இறுதி சடங்கிற்கு போக வேண்டும் என்று கூறுவார். கு சான் யூங்கிற்கு ஒரே குழப்பமாகிவிடும். இத்தனை நாட்களாக அப்பா சிறு வயதிலேயே இறந்து விட்டார் என்றுதான் அம்மா சொல்லியிருப்பார். ஆனால், அப்பா இப்போதுதான் இறந்து விட்டார் அவரின் இறுதி சடங்கிற்கு போக வேண்டும் என்று அம்மா சொல்வது அவளுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கும். எனினும், அம்மாவிடம் எந்த கேள்வியும் கேட்காமல் இறுதி சடங்கிற்கு செல்வாள். அங்கே சென்று பார்த்தால் இன்னொரு அதிர்ச்சி கு சான் யூங்கிற்கு காத்திருக்கும். ஏற்கெனவே அவளுக்கென்று எந்த உறவும் இல்லை என்று அவளது அம்மா கூறியிருப்பார். ஆனால், கு சான் யூங்கிற்கு பாட்டி இருப்பார். இன்னும் எத்தனை பொய்கள் என்று நினைத்துக்கொண்டு அவளின் தந்தையின் இறுதி சடங்கை முடித்து விட்டு இருவரும் கிளம்பப்போகும்போது அவளின் பாட்டி அவளுடைய தந்தையின் உயில் பற்றி அவளிடம் கூறுவார்.

அவளுடைய தந்தை வீட்டை மகள் பெயரில் எழுதி வைத்திருப்பார். அது மட்டுமில்லாமல், ஒரு பரிசு பெட்டியை அவளிடம் தரும்படி கூறியிருப்பார். அதில் பழைய காலத்தில் தலையிலே போடும் ஹேர் பேன்ட் போன்று ஒன்று எரிந்து போன நிலையில் இருக்கும். அதை தொட்டதும் கு சான் யூங்கிற்கு சாபம் தொற்றிக்கொள்ளும். இதற்கு பிறகுதான் கதை சூடுபிடிக்க தொடங்கும்.

இக்கதையில் வரும் இன்னொரு சுவாரஸ்யமான கதாபாத்திரம் பிரபஸர் கேரக்டராகும். யோம் ஹே சாங் ஒரு நாட்டுப்புறவியல் கலையைச் சொல்லிக் கொடுக்கும் கல்லூரி பேராசிரியர் ஆவார். சிறு வயதிலிருந்தே இவரால் ஆவி, பேய் போன்றவற்றை காண முடியும். எப்படி கதாநாயகியும் பிரபஸரும் சந்திக்கிறார்கள் என்பது சுவாரஸ்யமாக இருக்கும். கதாநாயகியிடம் அந்த சாபம் தொற்றிக்கொண்ட பிறகு அடுக்கடுக்காக கொலைகள் நடக்கும்.

இதையும் படியுங்கள்:
பேசுவதைக் குறைத்து, கேட்பதை அதிகரிப்பதில் இத்தனை பயன்களா?
If you haven't seen the Korean horror drama 'Revenant', you're loss out!

அதைப்பற்றி விசாரிக்க வரும் போலீஸ் கதாபாத்திரமே லீ ஹோங் சேவாகும். எப்படி இந்த மூன்று கதாபாத்திரங்களும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்படுகிறது என்பதே மீதமுள்ள கதை. கு சான் யூங்கின் சாபம் நீங்கியதா? அவளுடைய தந்தைக்கு என்ன ஆயிற்று? தன்னை துரத்தும் நிழல் உருவம் யார்? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்தார்களா இல்லையா? என்பதே மீதி கதையாகும்.

இந்தக் கதையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் கிம் தேரியின் நடிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவ்வளவு அருமையாக நடித்திருப்பார். கேரக்டர்களை தேர்ந்தெடுத்த விதம் மிகவும் அருமை. ஒவ்வொரு எபிஸோடின் முடிவிலும் எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். இந்தக் கதையை பார்க்காமல் மிஸ் பண்ணிடாதீங்க. கண்டிப்பாக ஹாரர் திரில்லர் பேன்ஸ் எல்லோரும் பார்க்க வேண்டிய தரமான டிராமாவாகும். கடைசி இரண்டு எபிஸோடுகள் மிகவும் விறுவிறுப்பாகப் போகும். சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கக்கூடிய அதிர்ச்சிகரமான திருப்பங்கள் நிறைந்திருக்கும்.

எனவே, ரெவனென்ட் கண்டிப்பாக ஹாரர் திரில்லர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com