அயலி வெப் சீரிஸில் நடித்த நடிகை இந்த பிரபலத்தின் மகளா?

அயலி  வெப் சீரிஸில் நடித்த நடிகை இந்த பிரபலத்தின் மகளா?

சினிமா திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் வெப் சீரிஸ்க்கும் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் முத்துக்குமார் இயக்கத்தில் குஷ்மாவதி அவர்கள் தயாரிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பைபெற்று வரும் வெப் சீரிஸ் தான் அயலி. இந்த வெப் சீரிஸில் அபி நக்ஷத்ரா, அனுமோல், மதன், லிங்கா சிங்கம் புலி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.இதன் திரைக்கதை மற்றும் வசனத்தை வீணை மைந்தன், சச்சின் மற்றும் முத்துக் குமார் ஆகியவர்கள் இணைந்து எழுதி உள்ளார்கள்.

இதில் முதன்மை கதா பாத்திரத்தில் அபி நட்சத்திரா மிக சிறப்பாக தனது பங்களிப்பை தந்திருப்பார். இந்த சீரிஸ் இவ்வளவு வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் இந்த படம் பெண்களுக்கு கல்வி, பால்ய விவாகம் குறித்து பேசுகிறது. பெண்கள் கல்வி எவ்வளவு முக்கியத்துவம் என்பதனை எடுத்துரைக்கும் வகையில் இந்த திரைப்படம் அமைந்ததுள்ளது. எனவே தமிழில் வெளியான இந்த சீரியஸ்க்கு , மக்கள் மத்தியில்வரவேற்பும், மிக பெரிய பாராட்டும் குவிந்து வருகிறது.

lovelyn
lovelyn

ரேவா இசையமைத்திருந்த நிலையில் இந்த தொடர் ஜி5 தளத்தில் வெளியாகிஇருக்கிறது. இந்த தொடரில் இடம் பெற்றிருக்கும் வசனங்களும் கதாபாத்திரங்களும் மக்கள் மத்தியில் அதிக பாராட்டுகளை பெற்று வருகிறது. முக்கியமாக முதன்மை கதாபாத்திரத்தில் அபி நக்ஷத்ராவின் தோழியாக நடித்துள்ள லவ்லின் சந்திரசேகர் நடிப்பு பெரியளவு பிரபலமாக உள்ளது.

லவ்லின் சந்திரசேகர் இதற்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகை சரிதாவின் தங்கையான விஜி சந்திரசேகரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ,தில்லு முல்லு' திரைப்படத்தில் அவருக்கு சகோதரி கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் தான் விஜி சந்திரசேகரன். அவரது மகள் தான் இந்த லவ்லின் சந்திரசேகர். இந்த அயலி வெப் சீரிஸில் தமிழ் செல்வியின் தோழியாக "மைதிலி" என்ற கேரக்டரில் லவ்லின் மிக சிறப்பாக நடித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com