
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சமையல் கலை வல்லுநர் மாதம்பட்டி ரங்கராஜ். குறிப்பாக பிரபலங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு தனது குழுவுடன் கேட்டரிங் செய்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ரம்யா பாண்டியன் உள்ளிட்டோரின் இல்ல விழாவின் இவரின் சமையல் தான்.
2019ம் ஆண்டு தமிழில் வெளிவந்த மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து பென்குயின் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரமாக தோன்றினார். மேலும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அவரது மனைவி பெயர் ஸ்ருதி. கடந்த சில காலமாகவே மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியிடம் இருந்து பிரிய போவதாகவும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்துகொண்டதாகவும், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தீயாக பரவு மாதம்பட்டி ரங்கராஜ் எந்த ஒரு பதிலும் சொல்லாமல், நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வந்தார்.
இப்படி இருக்கையில் தற்போது ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி நான். என்னோட கணவர் ரங்கராஜ் தான். அவர் தற்போது என்னுடன் தொடர்பில் இல்லை. என்னை ஏமாற்றிவிட்டார். எனக்கும் என் குழந்தைக்கும் நீதி வேண்டும். அவர் முதல் மனைவியோடு தொடர்பில் இருப்பது எனக்கு தெரியாது. கடந்த 1.5 ஆண்டுகளாக நாங்கள் திருமணம் செய்து ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தோம்," என தெரிவித்தார்.
"ஸ்டார் ஹோட்டலில் ஒரு முறையும், பிரபல தனியார் தொலைக்காட்சி ஷூட்டிங் ஸ்பாட் என இரண்டு இடங்களில் வைத்து என்னை தாக்கினார். 'குழந்தை வேண்டாம் நீ மட்டும் போதும்' என ரங்கராஜ் கூறியதாகவும் தெரிவித்தார்.
"நான் அவரோடு வாழணும். என் குழந்தைக்கு அவர் தான் அப்பா. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களின் திருமணம் MRC நகரில் உள்ள திரிவேதியம்மன் கோவிலில் நடந்தது. சில தினங்களுக்கு முன் அவரை தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்தேன். ஆனால் அவர் என்னுடன் பேசவில்லை. மீண்டும் நான் பேச முற்பட்ட போது அவர் என்னை பலர் முன்னிலையில் தாக்கினார். அவர் என்னோடு சேர்ந்து வாழ சிலர் தடுக்கின்றனர். அது அவரது நண்பர்களாக இருக்கலாம், அவரது தம்பியாக கூட இருக்கலாம்" என தனது வேதனையை தெரிவித்தார்.