குறும்படம் போட்ட கமல்! பிக்பாஸ் விட்டை விட்டு வெளியேறிய ஜனனி!

janany
janany
Published on

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.

தற்போது 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசல்,ஷிவின் கணேசன், அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ரஷிதா, ராம் ராமசாமி, ஏடிகே அமுதவாணன், ஜனனி, சாந்தி, விக்ரமன் மகேஸ்வரி, கதிரவன், குயின்சி, நிவாசினி , தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.மற்ற சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் ஆரம்பித்திலேயே போட்டியாளர்களிடம் சண்டை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. முதல் வாரத்தில் சாந்தி மாஸ்டர் எலிமினேஷன் ஆகி சென்றார்.இரண்டாவது வாரத்தில் அசல் எலிமினேட் ஆகி சென்றார். மூன்றாவதாக ஷெரினா சென்றார்.

நான்காவதாக மகேஸ்வரி சென்றுள்ளார்.ஐந்தாவதாக நிவாஷினி வெளியே சென்றுள்ளார்.ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார். ஏழாவதாக குயின்சி வெளியேறியுள்ளார்,எட்டாவதாக ராம் வெளியேறியுள்ளார் .ஒன்பதாவதாக ஆயீஷா வெளியேறியுள்ளார். இந்நிலையில் தற்போது மீதமுள்ள போட்டியாளர்களுக்கு இடையே கடுமையாக போட்டி நிலவி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் சீசன் 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com