பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு தடபுடல் விருந்து கொடுத்த கமல்!

KamalHaasan Hosted a Lunch for BB Team
KamalHaasan Hosted a Lunch for BB Team

பிக்பாஸ் சீசன் 7 முடிவடைந்த நிலையில் தொகுப்பாளர் கமல்ஹாசன் அனைவரையும் அழைத்து விருந்து வைத்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். எந்த சீசனிலும் இல்லாத பார்வையாளர்கள் இதில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார்.

புது புது டவிஸ்ட்கள், சர்ச்சைகளை கடந்து இந்த சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இந்த சீசன் வின்னராக அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து மணி ரன்னராக அறிவிக்கப்பட்டார்.

ஒரு வழியாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நிறைவடைந்து விட்ட நிலையில், கமல் பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பின்னாடி நின்று, நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாக உள்ள அனைவருக்கும் தடபுடலாக பொங்கல் விருந்து வைத்துள்ளார். ஏகப்பட்ட வெரைட்டியுடன், கமல் வைத்த தலைவாழலை விருந்தில் கமல்ஹாசனும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com