
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்7 ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். விதிப்படி பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்க வேண்டும். பிக்பாஸ் கடந்த ஆறு சீசன்களுமே மிக விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்ததால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே இந்நிகழ்ச்சி உருவாக்கிக்கொண்டது.
இதையடுத்து பிக்பாஸ் 7 தொடங்கப்பட்டு அட்டகாசமாக ஓடி கொண்டிருக்கிறது. புது விதமாக இந்த சீசனில் மட்டும் பிக்பாஸ் ஸ்மால் பாஸ் என்ற கான்சப்ட்டை கொண்டு வந்தனர். அதாவது கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு பிடிக்காதவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுவார்கள். அவர்களே பிக்பாஸ் வீட்டாருக்கு அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பார்கள்.
இப்படி சுவாரஸ்யமாக நகர்ந்து கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 7-ல் கடந்த வாரம் மிகப்பெரிய புரட்சி நடந்தது என்றே சொல்லலாம். அதாவது பெண் சுதந்திரம் என்ற பெயரில், அனைவராலும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார்.
இதனால் அவருக்கு சமூக வலைதளங்களில் ஆதரவுகள் பெருகியது. பொதுமக்களே மினி குறும்படங்களை வைரலாக்கி பிரதீப்புக்கு ஆதரவாக நிற்கின்றனர். இதனால் பிரதீப் ரீஎண்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே பிரதீப் ஆண்டனி வெளியே வந்த பிறகு நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு அவருக்கு வாழ்த்துகளை கூறிவிட்டு, ‘தீர விசாரிப்பதே மெய்’ என்ற ஹேஷ்டேக்கையும் டேக் செய்திருந்தார். இதனால் கொந்தளித்த கமல்ஹாசன், வார இறுதியான இன்றைய எபிசோட்டில், தீர விசாரித்ததனால் வந்த தீர்வு இது என கூறியுள்ளார்.
இன்றைய புரோமோவில் இதனை அவர் தெரிவித்துள்ளார். மேலும், இது தீர்ப்பு அல்ல என்றும், குற்றம் செய்தவர்கள் அதற்கான விளைவுகளை அனுபவித்தே ஆகவேண்டும் என்பதே நியதி என ஆணித்தனமாக கூறினார். அப்போ குற்றஞ்சாட்டியவர்கள் யோக்கியமா? அந்த கேள்விக்கு அவர்கள் நடத்தை பதில் சொல்லும்.
அதற்கான விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள் என தெரிவித்துள்ளார். இதனால் இன்றைய பிக் பாஸில் ஒரு பெரிய சம்பவம் காத்திருக்கு என்பது மட்டும் தெரிகிறது.