

திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக நெட்பிளிக்சில் 15/05/2026 முதல் தமிழ் டப்பிங்கில் வெளியாகி இருக்கும் படம் Kartavya.
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் ஆசிரமம் வைத்திருக்கும் ஒரு சாமியார். அவனது ஆசிரமத்தில் இருந்து பல சிறுவர்கள் மர்மமான முறையில் காணாமல் போய் இருக்கிறார்கள் என்று புகார் அளிக்க ஒரு பெண் பத்திரிக்கையாளர் ஒரு ஊருக்கு வருகிறார்.
நாயகன் ஒரு போலீஸ் ஆபீசர். அந்தப் பெண் பத்திரிக்கையாளரைப் பாதுகாப்பாக அழைத்து வரும் பணி அவனுடையது. ஆனால் போலீஸ் ஜீப்பில் போகும்போதே நாயகன் கண் முன் அவர் கொலை செய்யப்படுகிறார். இதனால் சஸ்பெண்ட் ஆகிறார் நாயகன். இன்னமும் 7 நாட்களில் கொலையாளியைப் பிடிப்பேன் என சவால் விடுகிறான் நாயகன்.
நாயகனின் அப்பா ஜாதி வெறி பிடித்தவர். நாயகனின் தம்பி ஒரு வேறு ஜாதிப்பெண்ணுடன் ஓடி விட்டான் என்பது தெரிந்து செமக் கோபத்தில் இருக்கிறார். பெண்ணின் அப்பாவும், பையனின் அப்பாவும் சேர்ந்து அந்த ஜோடியைக் கொல்லத் தேடி வருகின்றனர்.
நாயகனுக்கு இப்போது இரண்டு கடமைகள். தனது தம்பியையும், அவனது காதலியையும் கொலைகாரக் கும்பலிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
வில்லனின் கையாள் ஆக இருந்து பெண் பத்திரிக்கையாளரைக் கொலை செய்த சிறுவனைக் காப்பாற்றித்தன் பாதுகாப்பில் வைக்க வேண்டும். ஏன் எனில் அவன் அப்ரூவர் ஆக மாறி விட்டதால் வில்லன் சிறுவனைக் கொல்லத் துடிக்கிறான்.
இந்த இரண்டு கடமைகளையும் நிறைவேற்ற நாயகன் படும் பாடு தான் மொத்தத் திரைக்கதையும்.
நாயகன் ஆக சைஃப் அலி கான் போலீஸ் கம்பீரத்துடன் நடித்திருக்கிறார். மொத்தப் படத்தையும் அவர் தான் தாங்கி நிற்கிறார்.
நாயகி ஆக ரசிகா துகல் அழகாக வந்து போகிறார். இவருக்கான போர்சன் குறைவுதான்.
நாயகனின் உதவியாள் ஆக மிஸ்ரா நடித்திருக்கிறார்.
வில்லன் ஆக சவுரப் த்விவேதி நடித்திருக்கிறார். கமலின் சத்யா பட வில்லன் கிட்டி போல சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கும் கேரக்டர் டிசைன். ஆனால் பெரிதாக எடுபடவில்லை.
வில்லனின் கையாள் ஆக வரும் 14 வயது சிறுவனின் நடிப்பும் திருப்திகரமாய் இல்லை.
நாயகனின் அப்பாவாக வரும் ஜாகிர் ஹூசைன் நடிப்பு மிரட்டல் ரகம்.
படத்தில் நடித்த மற்ற அனைத்துக் கேரக்டர்களும் அவரவருக்குக் கொடுத்த வேலையை சரியாக செய்து இருக்கிறார்கள்.
இசை அனுராக் சைக்யா. பின்னணி இசையில் விறுவிறுப்பைக் கூட்டி இருக்கிறார். அனில் மேத்தாவின் ஒளிப்பதிவு கச்சிதம். ஜூபின் ஷேக்கின் எடிட்டிங் கில் படம் 108 நிமிடங்கள் ஓடுகிறது.
கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருப்பது புல்கிட்.
சபாஷ் டைரக்டர்
இரு வேறு கதை ட்ராக்குகளை ஒரு புள்ளியில் இணைக்கும் 1980 கால கட்டத்து ராஜேஷ் குமார் நாவல் டெக்னிக் நன்றாக செட் ஆகி இருக்கிறது.
நாயகன் போலீஸ் ஆபீசர் என்றாலும் தேவை இல்லாத ஹீரோ பில்டப் சீன் எதுவும் இல்லாதது ஆறுதல்.
கிராமங்களில் இன்னமும் இருக்கும் ஆணவப்படுகொலை மனப்பான்மையைப் போகிற போக்கில் சொன்ன விதம்.
லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்
நாயகன் ஹீரோயிசம் காட்டுவதற்காகத்தன் உயர் அதிகாரியையே எதிர்த்துப் பேசுவதும், அவரை மீறி செயல்கள் செய்வதும் ஓவர்.
முக்கியமான சாட்சியான சிறுவனை கோர்ட்டுக்கு அழைத்து வரும் நாயகன் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் கோர்ட் வாசலில் நிறுத்தி வைத்து விட்டு அவர் மட்டும் கோர்ட்டுக்குள் நுழைவது ஏனோ?
சிறுவனின் வாக்குமூலப் பேப்பர் வேண்டும் என மிரட்டும் வில்லனின் அடியாள் அப்போதே நாயகனிடம் அதைப் பெறாமல் ஒரு நாள் டைம் தர்றேன் என்று சொல்வது எதற்கு?
கொலை செய்த சிறுவன் 14 வயசுப்பையன், அவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பாமல் நாயகன் தன் கஸ்டடியில் வைத்திருப்பது முறையா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - 105 நிமிடங்கள் கொண்ட சின்னப்படம் தான் என்பதால் இந்த க்ரைம் ட்ராமாவைப் பார்க்கலாம்.