குக் வித் கோமாளியில் முதல் எலிமினேஷனில் வெளியேறிய கிஷோர் ...இவர் யார் தெரியுமா?

குக் வித் கோமாளியில் முதல் எலிமினேஷனில் வெளியேறிய கிஷோர் ...இவர் யார் தெரியுமா?

விஜய் டிவியின் மிக பிரபலமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. கடந்த 3 சீசன்களாக ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சியாக இருந்துவந்தகுக் வித் கோமாளி நிகழ்ச்சி, தற்போது தன்னுடைய 4வது சீசனை துவங்கியுள்ளது. கடந்த இருவாரங்களாக இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. கடந்த இருவாரங்களாக சுவாரஸ்யமான எபிசோட்களை தந்த குக் வித் கோமாளிசீசன் 4 நிகழ்ச்சியில் இந்தவாரம் எலிமினேஷன் நடைபெற்றது.

10 குக்குகள் மற்றும் கோமாளிகளுடன் இந்த நிகழ்ச்சி தற்போது தன்னுடைய பயணத்தை துவங்கியுள்ளது. விசித்ரா, ஸ்ருஷ்டி டாங்கே, காளையன், இயக்குநர் கிஷோர், ராஜ அய்யப்பா, விஷால் உள்ளிட்ட குக்குகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சிகளில் பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் எப்போதுமே முன்னிலையில் உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ்சீசன் 6 நிகழ்ச்சி நிறைவுற்ற நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு குக் வித்கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது.

அதில் கோமாளிகளாக வந்த புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, தங்கதுரை, பிஜிலி ரமேஷ் உள்ளிட்டோரின் அட்டகாசத்தை ரசித்தனர். குக் வித் கோமாளிநிகழ்ச்சி, தமிழ் நாட்டின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் என புகழ் பெற்றது.

குக்குகளாக ஷெரின், ஸ்ருஷ்டி டாங்கே, விசித்ரா, நடிகர்ராஜ் ஐயப்பா, விஜே விஷால், ஜிகர்தண்டா நடிகர் காளையன், கிஷோர் ராஜ்குமார், ஆன்ட்ரின் நௌரிகட் ஆகியோர் உள்ளனர். முதல் முறையாக சிவாங்கி, குக்காகமாறி அசத்தி வருகிறார்.

கடந்த இரு வாரங்களாக ரசிகர்களுக்கு எந்த விதமான எலிமினேஷனும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி போய்க்கொண்டிருந்தது.இந்நிலையில் இந்தவாரம் எலிமினேஷன் வாரமாக அமைந்துள்ளது. இதையொட்டி ஷெரின், காளையன் மற்றும் இயக்குநர் கிஷோர் இவர்களில் ஒருவர் எலிமினேட் ஆகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் இயக்குநர் கிஷோர் நிகழ்ச்சியில் இருந்து முதல் போட்டியாளராக எலிமினேட் ஆகியுள்ளார். இயக்குநர் கிஷோர் நாய் சேகர் என்ற படத்தை இயக்கியவர். கிஷோர் வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. இனி வரும் வாரங்களில் தொடர் எலிமினேஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com