கிஷோர்? காளையன்? ஷெரின்? வெளியேற போவது யார் ? குக் வித் கோமாளி சுவாராசியம்!

கிஷோர்? காளையன்? ஷெரின்? வெளியேற போவது யார் ? குக் வித் கோமாளி சுவாராசியம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பலரையும் கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி பொது மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த சீசனை போல மக்கள் இந்த சீசனுக்கும் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக ஜிபி முத்து, ஓட்டேரிசிவா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. போன சீசன் வரை கோமாளியாக இருந்த ஷிவாங்கி தற்போது குக் ஆக ப்ரமோட் ஆகி கலக்கி வருகிறார். ஷிவாங்கி தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழை பெற்று வருகிறார்.

தற்போது நிகழ்ச்சியில் குக் போட்டியாளர்களாக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா, கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். ,அதே போல் கோமாளியாக புகழ், சில்மிஷம் சிவா, ஜிபிமுத்து, ஓட்டேரி சிவா, குரேஷி, தீபன் , சுனிதா, மோனிஷா பிளெஸ்ஸி , ரவீனா தாஹா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.கடந்த வாரம் முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.வழக்கம் போல இந்த சீஸனும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இந்த வாரம் போட்டியாளர்களுக்கு எலிமினேஷன் ரவுண்டு நடைபெற்றுள்ளது.இதில் தப்பிக்க போட்டியாளர்கள் கடும் பாடுபட்டு சமைத்துள்ளனர்.அதன்படி இறுதியாக எலிமினேஷன் சுற்றுக்கு யாரும் எதிர்பாராதவிதமாக ஷெரின் ,காளையன் மற்றும் கிஷோர் ஆகியோர் வந்துள்ளனர், இதில் ஒருவர் இந்த வாரம் வெளியேறுவது உறுதி. இது ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது, மூன்று பேரும் செம்மையாக மக்களை மகிழ்விக்கிறார்கள், இவர்களில் ஒருவர் இல்லையென்றாலும் போர் அடிக்கும் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com