பெயரை பச்சை குத்தி KPY பாலாவுக்கு ஷாக் கொடுத்த ரசிகை.. வைரலாகும் போட்டோ!

kpy bala
kpy bala

விஜய் டிவி மூலம் பிரபலமான கேபிஒய் பாலா சமீப காலமாக பொதுமக்களுக்கு உதவி வருகிறார். சிறுவேடத்தில் கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் உள்ளே வந்த பாலா, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார். இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் குவிந்தன.

இதனை தொடர்ந்து சம்பாதிக்கும் பணத்தில் மக்களுக்கு முடிவு செய்ய வேண்டும் என முடிவெடுத்த பாலா, மலை கிராம மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்கினார். ஒரு நடுத்தர மக்களாய் அவர்களின் உணர்வுகளை புரிந்து உதவி செய்து வந்ததால் மக்கள் பலரும் அவரை பாராட்டி வந்தனர். மேலும் சமீபத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கபப்ட்ட மக்களுக்கும் வீடு வீடாக சென்று பண உதவி செய்தார்.

தொடர்ந்து இப்படி உதவிக்கு மேல் உதவி செய்து வரும் பாலாவிற்கு ரசிகர்கள் பட்டாளமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இவரின் ரசிகை ஒருவர் பாலாவை சந்தித்துள்ளார். அப்போது அவர் கையில் பாலாவின் பெயரை பச்சை குத்தியிருப்பதை காட்டியுள்ளார்.

இதனை பார்த்து நெகிழ்ந்து போன அவர் ரசிகையுடன் செல்பி எடுத்து அவர் கையில் குத்தியிருக்கும் டாட்டூவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், நான் அந்தளவிற்கு எல்லாம் வொர்த் இல்லை. இருந்தாலும் நீங்கள் இப்படி செய்ததற்கு லவ் யூ, நன்றி என்றும் வொண்டர் உமன் எனவும் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com