’லேபில்’ விமர்சனம்!

actor Jai
actor Jaith-i.thgim.com

முத்தமிழ் படிப்பகம்  சார்பில் தயாரித்துள்ள லேபில் என்ற வெப் தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில்  வெளியாகி உள்ளது. அருண் ராஜா காமராஜ் இயக்கி உள்ள இந்த தொடரில் ஜெய், மகேந்திரன், தான்யா ஹோப் நடித்துளார்கள். பல மெட்ராஸ் உட்பட பல படங்களின் சொன்ன வட சென்னை  களத்தை கொண்ட கேங்ஸ்டர் கதைதான்.

வட சென்னை வாலிநகர் பகுதியில் ஏரியாவின் லேபில்லாக (அடையாள மாக ) மாற விரும்பும் இரண்டு விடலை பருவத்து இளைஞர்கள் சந்தர்ப்ப வசத்தால் கொலை செய்து விடுகிறார்கள். வட சென்னை மக்கள் படிக்க வேண்டும் முன்னேற வேண்டும் என எண்ணம் கொண்டவராக இருக்கிறார் வழக்கறிஞர் ஜெய். இவர் கொலை செய்த இளைஞர்களை ஜாமீனில் வெளியே கொண்டு வந்து விடுகிறார்.

வெளியே வரும் இந்த இருவரும் வட சென்னையின் மிக பெரிய தாதாவை கொலை செய்து விடுகிறார்கள். இந்த தாதாவின் ஆட்கள் இளைஞர்கள் இருவரையும் கொல்ல துரத்துகிறார்கள். இந்த இருவரும் தப்பித்தார்களா என்பதே மீதிகதை. 

வேகமாக நகர்ந்து செல்லும் திரைக்கதை சற்று ஆறுதல். தொடரில் ஜெய், தான்யா ஹோப் தவிர மற்ற அனைத்து கேரக்டர்களுமே காது கூசும் அளவிற்க்கு கெட்ட வார்த்தை பேசுகிறார்கள். இத்தனை கெட்ட வார்த்தை தேவையா? என கேள்வி எழுகிறது. ஒரு விடலை பருவத்து தாதாவாக மகேந்திரன் சிறப்பாக நடித்துள்ளார்.

வக்கீல் கதாபாத்திரத்தில் ஜெய் இன்னும் சிரத்தையுடன் நடித்திருக்கலாம். தான்யா ஹோப்பிற்க் கு நடிக்க பெரிய வாய்ப்புகள் இல்லை. வன்முறை வேண்டாம் என்று சொல்லும் அறிவுறுத்தல் மிகக் குறைவாகவும் வன்முறை காட்சிகள் மிக அதிகமாகவும் இருக்கின்றன.

சாம்   C. S     தனது மற்ற படங்களுக்கு இசை அமைத்தது  போலவே இந்த தொடருக்கும்  இசை அமைத்துள்ளார்.வட சென்னையின் வாழ்வியல் பதிவாக வந்திருக்கவேண்டிய தொடர், வன்முறையை லேபிலாக கொண்டு வந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com